மின்னணு ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலக அளவில் மின்னணு ஏற்றுமதி முதல் 3 இடங்களில் உள்ளது. புதியன காணும் இளைஞர் சக்திக்கு இந்தப் பெருமையை திரு மோடி அளித்தார். இந்த உத்வேகத்தை வரும் காலங்களிலும் தொடர இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் பதிவில், பாரதத்தின் மின்னணு ஏற்றுமதி தற்போது முதல் 3 இடங்களில் உள்ளது என்று தெரிவித்திருந்தார். கடந்த காலத்தில் மணிக்கற்களும், ஆபரணங்களும் ஏற்றுமதியில் அதிகரித்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி அதிகரித்து, நிதியாண்டு 2024-25 ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டின் முடிவில் முதல் 10 ஏற்றுமதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளின் செய்திக் கட்டுரையையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சரின் எக்ஸ் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது;
"இது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மின்னணுவியலில் இந்தியாவின் வலிமை நமது புதியன காணும் இளைஞர் சக்தியால் இயக்கப்படுகிறது. சீர்திருத்தங்கள் மற்றும் மேக்இன்இந்தியாவை @makeinindia ஊக்குவிப்பதற்கான நமது முக்கியத்துவத்திற்கு இது ஒரு சான்றாகும்.
வரவிருக்கும் காலங்களில் இந்த வேகத்தைத் தொடர இந்தியா உறுதிபூண்டுள்ளது."
This is indeed a matter of immense joy. India’s prowess in electronics is powered by our innovative Yuva Shakti. It is also a testament to our emphasis on reforms and boosting @makeinindia.
— Narendra Modi (@narendramodi) August 5, 2024
India remains committed to continuing this momentum in the times to come. https://t.co/KFAzD8lseP