நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் பெரும் முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், மெருகேற்றவும் நாம் உறுதிபூண்டுள்ளோம் என்று திரு மோடி கூறியுள்ளார்.
வேத பாரம்பரிய இணையதளம் மற்றும் கலா வைபவ் (மெய்நிகர் அருங்காட்சியகம்) ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார் என்று தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையம் ட்விட்டர் பதிவு வெளியிட்டிருந்தது.
இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வேத பாரம்பரிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது என இந்திரா காந்தி தேசிய கலை மையம் தெரிவித்துள்ளது. இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேத மந்திரங்களின் ஆடியோ மற்றும் காட்சிகள் உள்ளன.
மையத்தின் மேற்கூறிய வளர்ச்சி குறித்து இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
"சிறந்த முயற்சி! நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நமது அரசு உறுதிபூண்டுள்ளது."
बेहतरीन प्रयास! देश की विरासत को संजोने और संवारने के लिए हमारी सरकार प्रतिबद्ध है। https://t.co/AgSuFcrBZm
— Narendra Modi (@narendramodi) March 25, 2023