2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு ஆடவர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு ஆடவர் அணியைச் சேர்ந்த நமது அற்புதமான துப்பாக்கி சுடும் வீரர்களான ருத்ரங்க்ஷ் பாட்டீல், திவ்யான்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வர்யா பிரதாப் தோமர் ஆகியோர் உலக சாதனையை முறியடித்து உண்மையிலேயே பிரமிப்பூட்டும் வகையில் தங்கம் வென்றுள்ளனர் .
சாம்பியன்களின் அற்புதமான திறமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தியதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார், மேலும் அவர்கள் தொடர்ந்து புதிய உயரங்களை அடைய வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
𝓢𝓱𝓸𝓸𝓽𝓲𝓷𝓰 𝓽𝓱𝓮𝓲𝓻 𝔀𝓪𝔂 𝓽𝓸 𝓽𝓱𝓮 𝓽𝓸𝓹! 🥇🇮🇳- 𝟏𝐬𝐭 𝐆𝐨𝐥𝐝 𝐟𝐨𝐫 𝐈𝐧𝐝𝐢𝐚⚡🤩@RudrankkshP, @DivyanshSinghP7, and Aishwary Pratap Tomar have hit the bullseye and secured the 1️⃣st Gold for India in the 10m Air Rifle Men's Team event at the #AsianGames2022.… pic.twitter.com/wQbtEYX2CQ
— SAI Media (@Media_SAI) September 25, 2023