1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத்- சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட்டு, இலக்கு எட்டப்பட்டிருப்பது, புதிய இந்தியாவில், புதிய ஆற்றலை புகுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளம் என்பது ஆரோக்கியமான குடிமக்களை சார்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர், “ஆரோக்கியமான குடிமக்களை சார்ந்துதான் இந்தியாவின் வளம் உள்ளது. மிக அதிக எண்ணிக்கையில் இது போன்ற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்பட்டிருப்பது, இந்தப் பாதையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இந்த சாதனை, புதிய இந்தியாவில், புதிய ஆற்றலை புகுத்தவிருக்கிறது”, என்று கூறினார்.
स्वस्थ नागरिकों में ही भारतवर्ष की समृद्धि निहित है। इस दिशा में रिकॉर्ड संख्या में बने ये हेल्थ एंड वेलनेस सेंटर्स बड़ी भूमिका निभाएंगे। यह उपलब्धि न्यू इंडिया में एक नई ऊर्जा भरने वाली है। https://t.co/OfBsRIorsR
— Narendra Modi (@narendramodi) December 29, 2022