இந்த ஆண்டுக்கான ‘தேர்வு குறித்த உரையாடல்’ பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவருக்கும், குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தேர்வு குறித்த உரையாடல்’, கடந்த காலங்களில் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பெறப்பட்ட விரிவான கருத்துகளால் மறக்க முடியாததாக அமைந்தது. உங்கள் அனைவரையும், குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ‘தேர்வு குறித்த உரையாடல்’ பதிவு செய்வதற்கான இணைப்பையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
Pariksha Pe Charcha is made even more memorable by the extensive inputs received from people across all walks of life. I invite you all, particularly the #ExamWarriors, parents and teachers to share their inputs for this year's interaction. #PPC2023 https://t.co/sX6JVWvYUo https://t.co/Huo522eZV4
— Narendra Modi (@narendramodi) January 5, 2023