மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் திரு. உத்தவ் தாக்கரேவிடம், பிரதமர் திரு.நரேந்திர மோடி பேசினார்.
இது குறித்து பிரதமர் டிவிட்டரில் விடுத்துள்ள பதிவில், ‘‘ மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் உத்தரவ் தாக்கரேவிடம் பேசினேன். பாதிக்கப்பட்ட சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு எனது அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள். நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மத்திய அரசின் உதவியை மீண்டும் வலியுறுத்தினேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Spoke to Maharashtra CM Uddhav Thackeray Ji regarding the situation arising due to flooding and heavy rain in parts of the state. My thoughts and prayers are with those sisters and brothers affected. Reiterated Centre’s support in the ongoing rescue and relief work. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) October 16, 2020