Quoteசர் எம்.எம் விஸ்வேஸ்வரய்யாவுக்கு அஞ்சலி செலுத்துனார்
Quote"சப்கா பிரயாஸ்' மூலம், இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும் பாதையில் உள்ளது"
Quote"கர்நாடகம் ஏழைகளுக்கு சேவை செய்யும் மத மற்றும் சமூக நிறுவனங்களைக் கொண்டுள்ளது"
Quote“எங்கள் அரசு ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது. இது கன்னடம் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மருத்துவக் கல்வி பயிலும் வசதியை வழங்கியுள்ளது.
Quote"ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுகாதார நலனுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்"
Quote"சுகாதாரம் தொடர்பான கொள்கைகளில் நாங்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்"

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று சிக்கபல்லாப்பூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார். அனைவருக்கும் மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சேவையை இந்த மருத்துவமனை முற்றிலும் இலவசமாக வழங்கும். 2023-ம் கல்வியாண்டில் இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கும்.

|

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர்நவீன இந்தியாவின் கட்டிடக் கலைஞர்களில் ஒருவரான சர்.எம்.எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்த இடம் சிக்கபல்லாப்பூர் என்றும்அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கும்அவரது அருங்காட்சியகத்தைப் பார்வையிடவும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தார். ”இந்த புண்ணிய பூமிக்கு முன் நான் தலை வணங்குகிறேன்" என்றும் பிரதமர் குறிப்பிட்டார். சர் விஸ்வேஸ்வரய்யா புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரவும்விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக புதிய பொறியியல் திட்டங்களை உருவாக்கவும் உத்வேகம் அளித்தது சிக்கபல்லாப்பூர் நிலம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

சேவையின் முன்மாதிரியாக சத்ய சாய் கிராம் செயபடுவதாக பிரதமர் கூறினார். கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் பணியை அவர் பாராட்டினார். இன்றைய மருத்துவக் கல்லூரி திறப்பு விழா அவர்களின் பணியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

|

அமிர்த காலத்தின் போது வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற தேசத்தின் தீர்மானத்தையும்இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்த மக்களின் ஆர்வத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். "ஒரே ஒரு பதில் உள்ளதுவலுவானஉறுதியான மற்றும் சமயோசிதமான பதில். அதாவது ஒன்றிணைந்த முயற்சி. நாட்டிலுள்ள ஒவ்வொரு மக்களின் முயற்சியாலும் இது நிச்சயம் நிறைவேறும்” என்றும் பிரதமர் கூறினார்.

‘வளர்ச்சியடைந்த இந்தியாவை’ அடைவதற்கான பயணத்தில் சமூக மற்றும் மத நிறுவனங்களின் பங்கையும்துறவிகள்ஆசிரமங்கள் மற்றும் மடங்களின் பாரம்பரியத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

இந்த சமூக மற்றும் மத அமைப்புகள்ஏழைகள்தாழ்த்தப்பட்டவர்கள்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கு அதிகாரம் அளித்து வருவதாகப் பிரதமர் கூறினார். “உங்கள் நிறுவனம் செய்யும் பணி, ‘அனைவரின் முயற்சி’ என்ற உணர்வை வலுப்படுத்துகிறது,” என்று பிரதமர் கூறினார்.

|

யோகாவின் நிபுணத்துவத்தை மையமாகக் கொண்ட ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகத்தின் ‘யோகா கர்மசு கௌசலம்’ என்ற குறிக்கோள் குறித்தும் பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.

மருத்துவத் துறையில் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் பிரதமர் மோடி விளக்கினார். 2014-ம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் 380-க்கும் குறைவான மருத்துவக் கல்லூரிகளே இருந்ததாகவும்ஆனால் இன்று 650-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கியிருந்த மாவட்டங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த 9 ஆண்டுகளில்நாட்டில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டில் உருவாகும் மருத்துவர்களின் எண்ணிக்கைசுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து தற்போது வரை இந்தியாவிலுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கைக்கு சமமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலனை கர்நாடகாவும் அறுவடை செய்து வருகிறது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர்நாட்டில் சுமார் 70 மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் கர்நாடகா என்றும்சிக்கபல்லாப்பூரில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி இரட்டை இன்ஜின் அரசின் முயற்சிக்கு எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகநாட்டில் 150-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரிகளை அமைக்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து தெரிவித்த பிரதமர்இதனால் செவிலியர் துறையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

|

மருத்துவக் கல்வியில் கற்பித்தல் மொழியிலுள்ள சவாலைக் குறிப்பிட்ட பிரதமர்மாநில மொழிகளில் மருத்துவக் கல்வியை கற்பிக்க கடந்த காலங்களில் போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வரும் இளைஞர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் துறையில் இடம் பெறுவதை மற்ற அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்றார். “எங்கள் அரசு ஏழைகளின் நலனுக்காக பாடுபடுகிறது. இது கன்னடம் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மருத்துவக் கல்வியை கற்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது” என்று பிரதமர் கூறினார்.

ஏழைகளை வாக்கு வங்கிகளாக மட்டுமே கருதும் அரசியல் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளதாக பிரதமர் வேதனை தெரிவித்தார். “எங்கள் அரசு ஏழைகளுக்கு சேவை செய்வதை தனது உயரிய கடமையாகக் கருதுகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆரோக்கியத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்” என்று பிரதமர் மோடி கூறினார். மக்கள் மருந்தகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை எடுத்துக்காட்டாகக் கூறிய பிரதமர்இன்று நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் உள்ளதாகவும்,  அவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கர்நாடகாவில் உள்ளதாகவும் கூறினார். இதுபோன்ற முயற்சியால் ஏழைகள் மருந்துகளுக்காக செலவிடும் தொகையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்  சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

|

ஏழைகள் மருத்துவமனைகளில் எளிதில் சிகிச்சை பெற முடியாத காலம் இருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசு ஏழைகளை கவனத்தில் கொண்டு,  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு மருத்துவமனைகளின் கதவுகளைத் திறந்துவிட்டு இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கர்நாடகாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், “ஏழைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சைக்கு அரசு உத்தரவாதம் அளித்துள்ளது” என்றார். இதய அறுவை சிகிச்சைமுழங்கால் மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் போன்ற அதிக செலவுடைய அறுவை சிகிச்சைகளின் கட்டணத்தைக் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“சுகாதாரம் தொடர்பான கொள்கைகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நமது தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படும்போது ஒட்டுமொத்த தலைமுறையினரின் ஆரோக்கியமும் மேம்படும் என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர்இதற்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகவும்கழிவறை கட்டுதல்இலவச எரிவாயு இணைப்புகள் வழங்குதல்குழாய் மூலம் குடிநீர் வழங்குதல்ஒவ்வொரு வீட்டிற்கும்இலவச சானிட்டரி நாப்கின்ளை வழங்குதல்சத்தான உணவுக்காக வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் அனுப்புதல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். மார்பகப் புற்றுநோய்க்கு அரசு அளித்துள்ள சிறப்புக் கவனத்தை சுட்டிக் காட்டிய அவர்கிராமங்களில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் திறக்கப்பட்டுஆரம்ப நிலையிலேயே இதுபோன்ற நோய்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மாநிலத்தில் 9,000க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை அமைத்ததற்காக கர்நாடக முதலமைச்சர் பொம்மை மற்றும் அவரது அரசுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

|

ஏஎன்எம் மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு அதிகாரம் அளித்ததற்காக கர்நாடக அரசைப் பிரதமர் பாராட்டினார். கர்நாடகாவில் 50 ஆயிரம் ஏஎன்எம் மற்றும் ஆஷா பணியாளர்கள்சுமார் 1 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நவீன கருவிகளைப் பெற்றுள்ளதாகவும்இரட்டை எஞ்சின் அரசு அவர்களுக்கு சாத்தியமான அனைத்து வசதிகளையும் வழங்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதாரத்துடன்பெண்களின் பொருளாதார மேம்பாட்டிலும் இரட்டை எஞ்சின் அரசு முழு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். கர்நாடகாவை பால் மற்றும் பட்டு நிலம் என்று கூறிய பிரதமர்கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை12 ஆயிரம் கோடி செலவில் கால்நடைகளுக்கு மாபெரும் தடுப்பூசி போடும் திட்டம் குறித்தும் தெரிவித்தார். இது பால் கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க இரட்டை எஞ்சின் அரசு மேற்கொண்டுள்ள முயற்சியாகும். கிராமங்களில் உள்ள பெண்களின் சுயஉதவி குழுக்களுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார். "நாடு ஆரோக்கியமாக இருக்கும் போது, 'அனைவரின் முயற்சியும்வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்படும் போதுவளர்ந்த இந்தியா என்ற இலக்கை விரைவாக அடைவோம்" என்றும் அவர் கூறினார்.

|

இறுதியில்பகவான் சாய்பாபா மற்றும் இந்நிறுவனத்துடனான தனது நீண்ட தொடர்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். அவர், “நான் இங்கு விருந்தாளி அல்லஇதே பகுதியைச் சேர்ந்தவர். ஒவ்வொரு முறையும் நான் உங்கள் மத்தியில் வரும்போது இந்த பந்தம் புதுப்பிக்கப்பட்டுவலுவான உறவுக்கான ஆசை இதயத்தில் துளிர்கிறது," என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைகுழந்தைகள் இதய பராமரிப்புக்கான ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மையத்தின் தலைவர் டாக்டர் சி ஸ்ரீநிவாஸ்சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

சிக்கபல்லாப்பூர் பகுதியில் மாணவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கும்குறைந்த செலவில் மக்கள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான முயற்சியாகஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை (SMSIMSR) பிரதமர் திறந்து வைத்தார். இது சிக்கபல்லாபூர்முத்தேனஹள்ளியில் சத்ய சாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்டது. கிராமப்புறத்தில் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதாரத்தை வணிகமயமாதலில் இருந்து மீட்டெடுப்பதற்கான நோக்குடன் நிறுவப்பட்ட எஸ்எம்எஸ்ஐஎம்எஸ்ஆர் நிறுவனம் மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சேவையை முற்றிலும் இலவசமாக அனைவருக்கும் வழங்கும். 2023ஆம் கல்வியாண்டில் இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கும்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

  • Gulam Askari April 05, 2023

    jai ho🇮🇳🇮🇳
  • Sangeeta Sharma April 02, 2023

    बहुत ही अच्छी सोच के साथ अच्छी पहल
  • CHANDRA KUMAR March 31, 2023

    कर्नाटक चुनाव जीतने के लिए बीजेपी को कुछ विशेष कार्य करना चाहिए 1. सबसे पहले केंद्र सरकार को 5000 कन्नड़ भाषा शिक्षक का नियुक्ति के लिए नोटिफिकेशन निकाल देना चाहिए। 2. कन्नड़ भाषा विश्वविद्यालय का स्थापना के लिए शिलान्यास कर दीजिए। 3. कर्नाटक में स्ट्रीट फूड का आनंद लीजिए और आम नागरिकों से सीधा जुड़ने का प्रयास कीजिए। 4. कर्नाटक इतिहास से जुड़ी ऐतिहासिक सामान, पुस्तक, मूर्ति आदि का प्रदर्शनी का आयोजन करवाइए। 5. कर्नाटक के विद्यालयों में भ्रमण कीजिए, छात्रों से संवाद कीजिए। 6. कर्नाटक की लडकियों को संगीत, नृत्य, कला, सॉफ्ट स्किल की शिक्षा के लिए 5000 रुपए छात्रवृत्ति की घोषणा कीजिए। 7. कर्नाटक में, प्रत्येक जिला में गरीब वृद्ध स्त्री पुरुष को, कपड़ा वितरण करवाइए। यह अनुदान का कार्य आरएसएस के द्वारा किया जाए, ताकि आचार संहिता उल्लंघन का आरोप नहीं लग सके। बीजेपी को कांग्रेस पार्टी की रणनीति समझ में ही नहीं आ रहा है। कांग्रेस पार्टी का एकमात्र उद्देश्य है अपना अस्तित्व बचाना। दक्षिण भारत से वापसी करना। लेकिन बीजेपी को कोई मौका नहीं देना चाहिए। कांग्रेस पार्टी के तीन रणनीति को तत्काल असफल कीजिए 1. बीजेपी अडानी को सरकारी पैसा देती है और अडानी चुनाव में बीजेपी का मदद करता है। बीजेपी को एक योजनाबद्ध तरीके से इसका जवाब देना चाहिए। a) ग्लोबलाइजेशन और निवेश के नाम पर देश में विदेशी कंपनियों को बुलाया, और इसीलिए आज देश में भारतीय कंपनी खत्म होता जा रहा है। बीजेपी भारतीय कंपनियों को बचाने का प्रयास कर रही है। परिवार में यदि बड़ा बेटा ज्यादा कमाने लगता है तो उसे घर से भगाते नहीं है, बल्कि उससे कहते हैं की परिवार को मजबूत बनाओ, सबके हित में काम करो। यदि देश की कुछ कंपनी अच्छा प्रदर्शन कर रही है, उन्नति कर रही है, तो क्या इन कंपनियों को नष्ट कर दें। विदेशी कंपनियों को ही सहायता करते रहना कांग्रेस पार्टी का लक्ष्य था। लेकिन बीजेपी स्वदेशी कंपनियों की मदद करके उसे मल्टीनेशनल करके मल्टीब्यूजनेस में आगे बढ़ा रही है। बीजेपी ने स्टार्ट अप को भी आगे बढ़ाया है। बीजेपी किसी भी कंपनी के साथ पक्षपात नहीं कर रही है। इतना ही नहीं, बीजेपी को सभी प्राइवेट कंपनी का मीटिंग बुलाना चाहिए। सभी प्राइवेट कंपनी को एक सिस्टम बनाकर स्थाई रोजगार की घोषणा करने के लिए प्रेरित करना चाहिए। TA DA देना चाहिए , बीजेपी को यह दिखाना चाहिए की कांग्रेस पार्टी भारतीय कंपनियों का दुश्मन है और विदेशी कंपनियों का सहायक है। अडानी और अंबानी से कांग्रेस पार्टी को इसीलिए परेशानी है क्योंकि यह कंपनी भारतीय है, तेजी से विकसित हो रही है, मल्टीनेशनल बन गई है, और मल्टी बिजनेस को अपना रही है। सत्ता में रहते हुए कांग्रेस पार्टी ने पतंजलि कंपनी के साथ सौतेला व्यवहार किया था ! बीजेपी देश की सभी कंपनी को समान अवसर दे रही है। बीजेपी ने देश में कई स्टार्ट अप को आगे बढ़ाया है,जिसे देखकर कांग्रेस पार्टी पागल ही गई है। भारत में आकर विदेशी कंपनी, बिजनेस करके बड़ा हो जाता हैं तब कांग्रेस पार्टी को कोई दिक्कत नहीं होता है। लेकिन भारत की कंपनी विदेश जाकर अपना विस्तार करता है तब कांग्रेस पार्टी के पेट का पानी नहीं पचता है। कांग्रेस पार्टी को अडानी अंबानी से लड़ाई नहीं है, बल्कि हर तरह के विकसित भारतीय तत्वों से कांग्रेस पार्टी नफरत करती है। अब बीजेपी को देश की सभी राष्ट्रीय कंपनियों की सूची बनाकर देश की जनता के सामने रखना चाहिए, किस कंपनी ने कितना रोजगार दिया है और कितना रोजगार देने वाला है, इसका सूची जारी करना चाहिए! 2. राहुल गांधी को जेल भेजना, बीजेपी को दोष दिया जा रहा है की अंबानी अडानी का विरोध करने की वजह से ही राहुल गांधी को जेल भेजा गया। राहुल गांधी ने मोदी जाति को चोर कहा। इससे पहले राहुल गांधी ने ब्राह्मणों को दलितों पर अत्याचार करने वाला कहा था। कांग्रेस पार्टी अलग अलग समय में, अलग अलग स्थान पर, अलग अलग जाति को निशाने (Target) पर लेती है और समाज में विद्वेष पैदा करती है। राहुल गांधी भी जातिवाद को बढ़ाकर देश को बरबाद करना चाहता है, दंगा करवाना चाहता है। राहुल गांधी हिंदुओं को जातियों में तोड़कर वोट का फसल काटना चाहता है। कांग्रेस पार्टी जातिगत जनगणना भी इसी उद्देश्य से करवाना चाहता है ताकि देश जातिवाद का जहर फैलाया जाए। देश को बरबाद करके देश को लूटना कांग्रेस पार्टी का पुराना व्यवसाय है। 3. बीजेपी दक्षिण भारत को इग्नोर करता है, डबल इंजिन के नाम पर राज्य को केंद्र सरकार कंट्रोल करता है। सभी बीजेपी शासित राज्य में केंद्र सरकार की योजना को लागू करे और उस योजना के खर्च को बढ़ा दे। इससे योजना का प्रभाव ज्यादा दिखेगा। बीजेपी बहुत ही मामूली काम करके देश की जनता को खुश कर सकता है। न कोई अतिरिक्त खर्च होगा और न ही कोई अतिरिक्त संसाधन लगेगा, बस थोड़ा सा इच्छाशक्ति चाहिए। a) सबसे पहले बीजेपी को नशामुक्त भारत की घोषणा कर देना चाहिए। भारत का नशीला पदार्थ विदेशों में बेचा जा सकता है, लेकिन कोई भी नशीला पदार्थ का आयात नहीं किया जायेगा। भारतीयों को नशीला पदार्थ का सेवन करने से रोका जाए। तस्करी बढ़ने का संदेह सही हो सकता है लेकिन तस्करी के डर से अच्छा निर्णय नहीं ले, यह भी तो उचित नहीं है। b) खाद्य पदार्थों पर से टैक्स हटा लिया जाए, ताकि सभी खाद्य पदार्थ सस्ता हो जाए। c) पेट्रोलियम उत्पाद को सस्ता कर दिया जाए। d) विदेशी कंपनी को देश से बाहर करने का घोषणा कर दिया जाए। अब भारत में केवल भारतीय कंपनी का ही वर्चस्व होगा। e) देश में केवल अच्छा उत्पाद ही बिकेगा, नागरिकों के शारीरिक मानसिक स्वास्थ्य को नुकसान पहुंचाने वाले सामान को बिकने से रोका जाए। f) देश के नागरिकों के लिए एक वेबसाइट बनाया जाए। सभी भारतीय नागरिकों से आग्रह किया जाए, अपना वोटर आईडी नंबर डालकर, किस सरकारी योजना का लाभ आपको मिला, और किस सरकारी योजना का लाभ आपको नहीं मिला, उसपर मार्किंग कीजिए। इस सर्वे में जिन भारतीय नागरिकों को एक भी योजना का लाभ नहीं मिला हो, उनके बैंक अकाउंट में एक हजार रुपए भेजा जाए। इससे भारतीय नागरिकों के हाथ में पैसा जायेगा, मार्केट में पैसा का फ्लो बढ़ेगा, देश का आर्थिक स्थिति बेहतर होगा। इस सर्वे में यह मालूम हो जायेगा की किन सरकारी योजना पर व्यर्थ में पैसा बरबाद हो रहा है, उसे बंद करके दूसरी योजना प्रारंभ किया जाए। सरकारी योजना को लागू नहीं करने के आधार पर, कार्रवाई शुरू किया जाए, दंड और प्रोत्साहन ही सरकारी योजना को जनता तक पहुंचा सकता है और सरकार को जनता से जोड़ सकता है। मोदीजी को सभी उद्योगपति से मीटिंग करना चाहिए, जनता को लगना चाहिए की मोदीजी सभी उद्योगपति को आगे बढ़ाना चाहता है, केवल अडानी अंबानी को ही नहीं। साप्ताहिक मीटिंग देश के व्यवसायियों के साथ किया जाना चाहिए। सभी जिला उपायुक्त को निर्देश दिया जाए की वह अपने अपने जिले में व्यवसायियों के साथ प्रत्येक सप्ताह मीटिंग करे, उनकी समस्या को दूर करे, और व्यवसाय बढ़ाने में भागीदार बने। 4. भारतीय मुद्रा का मूल्य बढ़ा दिया जाए, इससे कम मुद्रा देकर ज्यादा पेट्रोलियम का आयात किया जा सकेगा। देश के मंदिरों के स्वर्ण तथा वक्फ बोर्ड के संपत्ति पर भी मुद्रा जारी किया जाए। 5. देश में 10000 न्यायाधीश की नियुक्ति के लिए यूपीएससी को विज्ञापन जारी करने का निर्देश दिया जाए। यदि न्यायपालिका और विपक्ष विरोध करे की यूपीएससी द्वारा न्यायाधीश का नियुक्ति नहीं करना चाहिए। तब बीजेपी को जनता के बीच कहना चाहिए की कॉलेजियम और कांग्रेस जनता को न्याय से वंचित कर रही है। देश में लंबित मुकदमे को खत्म करने तथा देश की जनता को न्याय दिलाने का प्रयास बीजेपी सरकार कर रही है। दस हजार न्यायाधीशों की नियुक्ति में, सभी एलएलबी किए हुए भारतीय नागरिक को आवेदन देने का मौका दिया जाए। इसमें यूपीएससी द्वारा प्रश्नपत्र में रीजनिंग, सामान्य ज्ञान, सामान्य गणित, भारतीय तथा विश्व न्याय व्यवस्था, भारतीय संविधान आदि से प्रश्न पूछा जाए। इसमें इंटरव्यू नहीं रखा जाए, जिससे सामान्य गरीब परिवार के बच्चे को इंटरव्यू में छटने से रोका जा सके। इस तरह कॉलेजियम सिस्टम का महत्व घटेगा, देश में रोजगार बढ़ेगा। अब न्यायाधीशों का स्थानांतरण में, उन न्यायाधीश को प्राथमिकता दिया जाए, जो अच्छा न्याय करता है। न्यायाधीश का प्रमोशन में उन्हें प्राथमिकता दिया जाए जो फैसला सुनाने में निष्पक्ष है और फैसला मिलने के बाद वादी प्रतिवादी संतुष्ट हो जाता है और उच्च न्यायालय में अपील नहीं करता है। इस तरह से कॉलेजियम सिस्टम का महत्व घटेगा और सरकार का माहत्व बढ़ेगा। आज कॉलेजियम सिस्टम के माध्यम से चंद्रचूड़ जैसा न्यायाधीश कांग्रेस पार्टी के समर्थन में सुप्रीम कोर्ट का उपयोग कर रहा है।
  • Rohit Saini March 28, 2023

    जय हो
  • Sharanabasava March 28, 2023

    Jay modi ji
  • Jayakumar G March 27, 2023

    jai Bharat🌺🌺🌺🌺🇮🇳
  • Arun Gupta, Beohari (484774) March 26, 2023

    🙏💐
  • Kuldeep Yadav March 26, 2023

    આદરણીય પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારા નમસ્કાર મારુ નામ કુલદીપ અરવિંદભાઈ યાદવ છે. મારી ઉંમર ૨૪ વર્ષ ની છે. એક યુવા તરીકે તમને થોડી નાની બાબત વિશે જણાવવા માંગુ છું. ઓબીસી કેટેગરી માંથી આવતા કડીયા કુંભાર જ્ઞાતિના આગેવાન અરવિંદભાઈ બી. યાદવ વિશે. અમારી જ્ઞાતિ પ્યોર બીજેપી છે. છતાં અમારી જ્ઞાતિ ના કાર્યકર્તાને પાર્ટીમાં સ્થાન નથી મળતું. એવા એક કાર્યકર્તા વિશે જણાવું. ગુજરાત રાજ્ય ના અમરેલી જિલ્લામાં આવેલ સાવરકુંડલા શહેર ના દેવળાના ગેઈટે રહેતા અરવિંદભાઈ યાદવ(એ.બી.યાદવ). જન સંઘ વખત ના કાર્યકર્તા છેલ્લાં ૪૦ વર્ષ થી સંગઠનની જવાબદારી સંભાળતા હતા. ગઈ ૩ ટર્મ થી શહેર ભાજપના મહામંત્રી તરીકે જવાબદારી કરેલી. ૪૦ વર્ષ માં ૧ પણ રૂપિયાનો ભ્રષ્ટાચાર નથી કરેલો અને જે કરતા હોય એનો વિરોધ પણ કરેલો. આવા પાયાના કાર્યકર્તાને અહીંના ભ્રષ્ટાચારી નેતાઓ એ ઘરે બેસાડી દીધા છે. કોઈ પણ પાર્ટીના કાર્યકમ હોય કે મિટિંગ એમાં જાણ પણ કરવામાં નથી આવતી. એવા ભ્રષ્ટાચારી નેતા ને શું ખબર હોય કે નરેન્દ્રભાઇ મોદી દિલ્હી સુધી આમ નમ નથી પોચિયા એની પાછળ આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તાઓ નો હાથ છે. આવા પાયાના કાર્યકર્તા જો પાર્ટી માંથી નીકળતા જાશે તો ભવિષ્યમાં કોંગ્રેસ જેવો હાલ ભાજપ નો થાશે જ. કારણ કે જો નીચે થી સાચા પાયા ના કાર્યકર્તા નીકળતા જાશે તો ભવિષ્યમાં ભાજપને મત મળવા બોવ મુશ્કેલ છે. આવા ભ્રષ્ટાચારી નેતાને લીધે પાર્ટીને ભવિષ્યમાં બોવ મોટું નુકશાન વેઠવું પડશે. એટલે પ્રધામંત્રીશ્રી નરેન્દ્ર મોદીજી ને મારી નમ્ર અપીલ છે કે આવા પાયા ના અને બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ મૂકો બાકી ભવિષ્યમાં ભાજપ પાર્ટી નો નાશ થઈ જાશે. એક યુવા તરીકે તમને મારી નમ્ર અપીલ છે. આવા કાર્યકર્તાને દિલ્હી સુધી પોચડો. આવા કાર્યકર્તા કોઈ દિવસ ભ્રષ્ટાચાર નઈ કરે અને લોકો ના કામો કરશે. સાથે અતિયારે અમરેલી જિલ્લામાં બેફામ ભ્રષ્ટાચાર થઈ રહીયો છે. રોડ રસ્તા ના કામો સાવ નબળા થઈ રહિયા છે. પ્રજાના પરસેવાના પૈસા પાણીમાં જાય છે. એટલા માટે આવા બિન ભ્રષ્ટાચારી કાર્યકર્તા ને આગળ લાવો. અમરેલી જિલ્લામાં નમો એપ માં સોવ થી વધારે પોઇન્ટ અરવિંદભાઈ બી. યાદવ(એ. બી.યાદવ) ના છે. ૭૩ હજાર પોઇન્ટ સાથે અમરેલી જિલ્લામાં પ્રથમ છે. એટલા એક્ટિવ હોવા છતાં પાર્ટીના નેતાઓ એ અતિયારે ઝીરો કરી દીધા છે. આવા કાર્યકર્તા ને દિલ્હી સુધી લાવો અને પાર્ટીમાં થતો ભ્રષ્ટાચારને અટકાવો. જો ખાલી ભ્રષ્ટાચાર માટે ૩૦ વર્ષ નું બિન ભ્રષ્ટાચારી રાજકારણ મૂકી દેતા હોય તો જો મોકો મળે તો દેશ માટે શું નો કરી શકે એ વિચારી ને મારી નમ્ર અપીલ છે કે રાજ્ય સભા માં આવા નેતા ને મોકો આપવા વિનંતી છે એક યુવા તરીકે. બાકી થોડા જ વર્ષો માં ભાજપ પાર્ટી નું વર્ચસ્વ ભાજપ ના જ ભ્રષ્ટ નેતા ને લીધે ઓછું થતું જાશે. - અરવિંદ બી. યાદવ (એ.બી યાદવ) પૂર્વ શહેર ભાજપ મહામંત્રી જય હિન્દ જય ભારત જય જય ગરવી ગુજરાત આપનો યુવા મિત્ર લી. કુલદીપ અરવિંદભાઈ યાદવ
  • PRATAP SINGH March 26, 2023

    🙏🙏🙏 मनो नमो।
  • Purandar Jadhav March 25, 2023

    pm inaugates srimadhududan
Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Over 28 lakh companies registered in India: Govt data

Media Coverage

Over 28 lakh companies registered in India: Govt data
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 19 பிப்ரவரி 2025
February 19, 2025

Appreciation for PM Modi's Efforts in Strengthening Economic Ties with Qatar and Beyond