Transparency and accountability are requisite for democratic and participative governance: PM Modi
Empowered citizens are strongest pillars of our democracy: PM Modi
Five Pillars of Information highways- Ask, Listen, Interact, Act and Inform, says PM Modi
India is rapidly moving towards becoming a digitally empowered society: PM Narendra Modi
A new work culture has developed; projects are now being executed with a set time frame: PM Modi
GeM is helping a big way in public procurement of goods and services. This has eliminated corruption: PM Modi
Over 1400 obsolete laws have been repealed by our Government: Prime Minister

 

புதுதில்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (6.03.2018) திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த கட்டிடம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்காக இக் கட்டுமானத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து முகைமைகளையும் பாராட்டுவதாகவும் கூறினார். சுற்றுச்சூழலுக்கு உகந்த கிருஹா-IV நெறிமுறைகளுக்கு ஏற்ப கட்டப்படுவதால் மின்சக்தி சேமிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும் என்றார்.

பிரதமர் இந்த புதிய கட்டிடம் மத்திய தகவல் ஆணையத்தின் பணிகளில் மேலும் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்புகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

மத்திய தகவல் ஆணையத்தின் செயலி  தொடங்கி வைக்கப்பட்டது பற்றி குறிப்பிட்ட பிரதமர், இதனால் குடிமக்கள் மிக எளிதாக மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், தகவல் ஆணையம் அளிக்கும் தகவல்களை எளிதாக அவர்கள் பார்க்கவும் வசதி ஏற்படும் என்றும் கூறினார்.

ஜனநாயக மற்றும் பங்கேற்பு ஆளுகைக்கு வெளிப்படைத்தன்மையும், பொறுப்பேற்கும் தன்மையும் தேவை என்று பிரதமர் கூறினார். இந்த வகையில் மத்திய தகவல் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது என்றார். நம்பிக்கை அடிப்படையிலான ஆளுகைக்கு இத்தகைய நிறுவனங்கள் வினை ஊக்கியாக செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

அதிகாரம் அளிக்கப்பட்ட குடிமகன் நமது ஜனநாயகத்தின் வலுவான தூண் என்று பிரதமர் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு வழிகள் மூலம் மக்களுக்கு தகவல் அளித்து அதிகாரம் அளித்து வருகிறது என்றார் அவர். நவீன தகவல் நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ள 5 தூண்களை அவர் பட்டியலிட்டார்.

இதில் முதலாவது தூண் கேள்வி (சவால்) கேட்பதாகும். இந்த வகையில் MyGov என்ற குடிமக்கள் பயன்படுத்தும் மேடையை பிரதமர் குறிப்பிட்டார். இரண்டாவது தூண் ஆலோசனைகளுக்கு செவி மடுத்தல் (சுஜாவ்). தமது அரசு செவி மடுக்க கூடியதாகவும், சிபிஜிஆர்ஏஎம்எஸ் அல்லது சமூக ஊடகங்கள் வழியாக பெறப்படும் ஆலோசனைகளையும் திறந்த மனதுடன் கேட்பதாகவும் அவர் கூறினார்.

இது மூன்றாவது தூண் கலந்தாலோசனை (சம்வாத்) இதன்மூலம் குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். நான்காவது தூண் செயல்பாடு (சக்ரீய்தா). ஜிஎஸ்டி நடைமுறையின்போது எழுந்த புகார்களுக்கும் ஆலோசனைகளுக்கும் மிகத் தீவிரமான முறையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஐந்தாவது தூண் என்பது தகவல் (செய்தி). தனது செயல்பாடுகள் குறித்து குடிமக்களிடம் தெரிவிப்பது அரசின் கடமை என்று பிரதமர் குறிப்பிட்டார். உடனுக்குடன் தகவல்களை அளிப்பது, ஆன்லைன் டாஷ்போர்டுகள் மூலம் அளிக்கும் புதிய பழக்கத்தை அரசு தொடங்கி உள்ளது என அவர் குறிப்பிட்டார். சவுபாக்யா மற்றும் உஜாலா போன்ற திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்த தகவல்களும் அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பொதுவாக கோரப்படும்  தகவல்களை இணைய தளங்களில் பதிவேற்றும்படி சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். வெளிப்படைத் தன்மையையும் குடிமக்கள் சேவைகளின் தரத்தையும் மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதே போல் திட்டங்களின் நிலை குறித்தும் உடனுக்குடன் கண்டறியப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் கேதார்நாத்தில் மறு கட்டுமான பணிகள் ஆளில்லா விமான கேமரா மூலம் தெரிந்து கொள்ளப்பட்டது என அவர் கூறினார். 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை விரைவுபடுத்த பிரகதி கூட்டங்கள் உதவியுள்ளன என்றார்.

விநியோகம் மற்றும் நீக்குதல் தலைமை இயக்குனரகம் மூடப்பட்டதன் உதாரணத்தை பிரதமர் குறிப்பிட்டார். பொது கொள்முதல்கள் தற்போது அரசின் மின்னணு சந்தைகள் மூலம் செய்யப்படுவதாக அவர் கூறினார். இது ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும் உதவுகிறது. அரசுக்கும் மக்களுக்கும் இடையே மனித குறுக்கீடுகளை குறைப்பது குறித்தும் அவர் பேசினார்.

வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும் போது அரசின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

குடிமக்கள் தங்களது உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சரியாக செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு தலைமை தகவல் ஆணையர் விளக்குவார் என்றும் அவர் கூறினார். உரிமைகள் குறித்த கோரிக்கை எழும் போது கடமைகள் மறந்து போக கூடாது என அவர் கூறினார். தற்போதைய நிலைகள் மற்றும் எதிர்கால சவால்களை மனத்தில் வைத்துக் கொள்ளும் போது ஒவ்வொரு நிறுவனமும் பொறுப்பையும் உரிமைகளையும் சமன்படுத்த வேண்டும் என்றார்.

Click here to read PM's speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait

Media Coverage

Snacks, Laughter And More, PM Modi's Candid Moments With Indian Workers In Kuwait
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Narendra Modi to attend Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India
December 22, 2024
PM to interact with prominent leaders from the Christian community including Cardinals and Bishops
First such instance that a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India

Prime Minister Shri Narendra Modi will attend the Christmas Celebrations hosted by the Catholic Bishops' Conference of India (CBCI) at the CBCI Centre premises, New Delhi at 6:30 PM on 23rd December.

Prime Minister will interact with key leaders from the Christian community, including Cardinals, Bishops and prominent lay leaders of the Church.

This is the first time a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India.

Catholic Bishops' Conference of India (CBCI) was established in 1944 and is the body which works closest with all the Catholics across India.