குஜராத்தின் அகமதாபாதில் உள்ள மோடி கல்வி வளாகத்தின் முதலாம் திட்டத்தினை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசிய பிரதமர், நேற்று அன்னை மோதேஸ்வரி ஆலயத்தில் தரிசனமும், பூஜையும் செய்ததை பாக்கியமாக கருதுகிறேன் என்றார். ராணுவத் தளபதி கரியப்பா ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை விளக்கியது குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், அவர் எங்கு சென்றாலும் அவருக்கு அனைவரும் வணக்கம் தெரிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்தது என்றும் ஆனால், பிறிதொரு சமயத்தில், அவர் இங்கு வந்தபோது அவருக்கு மக்கள் அளித்த மரியாதை வித்தியாசமான முறையில் இருந்தது என்றும் குறிப்பிட்டார். மக்களின் சந்தோஷமும், நன்றியும் புதிய வடிவில் அமையப் பெற்றிருந்ததாக ஜெனரல் கரியப்பா குறிப்பிட்டிருந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வை ஒப்பீடு செய்து பேசிய பிரதமர், “நான் இங்கு வந்தபோது மக்கள் அளித்த வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த நிகழ்வை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தவர்களை பாராட்டுகிறேன். உங்களுடைய குறிக்கோளில் நீங்கள் உறுதியுடன் இருந்து, இந்தப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, இதனை சிறப்பாக நிறைவேற்றியுள்ளீர்கள்” என்று பாராட்டினார்.
“வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் தவித்து வந்த மக்கள் தற்போது சுயமுயற்சியில் முன்னேறி வருவது சிறப்பானதாகும். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கல்விக்கென ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். அவர்களின் இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் வலிமை சிறப்பு மிக்கதாகும். அவர்களின் பாதை சரியானது. அதன் மூலம், அவர்கள் முன்னேற்றம் அடைவது உறுதியாகும். மக்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து அவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பெருமைமிக்க விஷயமாகும். இந்த கலியுகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து, அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.
“இந்த மண்ணின் மைந்தர் ஒருவர் குஜராத்தின் முதல்வராக நீண்ட காலமும், தற்போது நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையும் ஆகியுள்ளார். அவருடைய நீண்ட ஆட்சிக் காலத்தில் இந்த பகுதியை சார்ந்த மக்கள் தங்களது சுய லாபத்துக்காக ஒருமுறை கூட சந்தித்தது கிடையாது. அவர்களுக்கு மனதார மரியாதை செலுத்துகிறேன்” என்று பிரதமர் கூறினார்.
“இன்றைய சூழ்நிலையில் ஏராளமான இளைஞர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் இதரசில துறைகளில் ஆர்வம் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறன் மேம்பாடு குறித்து வலியுறுத்திப் பேசிய பிரதமர், சிறார்கள் கல்வி கற்கும்போது மிகப்பெரிய சவால்கள் ஏற்படும். குழந்தைகளின் திறன் மேம்பாடு மேன்மையடைய பெற்றோர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். திறமைகள் வளர்ச்சியடைய முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், வெறும் பட்டப் படிப்பு சான்றிதழ்களோடு இருப்பவர்களை காட்டிலும் திறன் மேம்பாட்டில் வளர்ச்சிப் பெற்றவர்கள் அதிக ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின்றனர்” என்றார்.
பிரதமர் தனது சிங்கப்பூர் அரசுமுறைப் பயணத்தின்போது, அந்நாட்டின் பிரதமரை சந்தித்து பேசிய நிகழ்வை நினைவுப்படுத்தினார். “அப்போது, அங்குள்ள தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு சென்றேன். அங்கு அனைவரும், குறிப்பாக வசதி வாய்ப்பு பெற்ற மக்களும் வரிசையில் நின்று சேர்க்கைக்காக காத்திருந்தது சிறப்பானதாகும்” என்றார்.
“இங்குள்ள தொழிலாளர் வர்க்கத்தினரின் சக்தி அளவு கடந்ததாகும். அவர்கள் கடின உழைப்பாளி வர்க்கத்தினர். அவர்களை பற்றி எண்ணும்போது பெருமை கொள்ள வேண்டும். இந்த கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்கள் ஒருபோதும் பாதிப்படையாமல், மற்ற நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது சிறப்பாகும்” என்றார்.
இந்த விழாவில் குஜராத் முதல்வர் திரு.பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.ஆர்.பாட்டீல், குஜராத் மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
I want to emphasise that societies that focus on education will succeed. Thus, I hope we keep focusing on ways to make education more accessible to the youth: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 10, 2022
I am glad that more youngsters are focusing on medicine, engineering and other such streams. At the same time, I want to stress on the importance of skill development as well: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 10, 2022