Today, Indian Railways is cleaner than ever. The broad gauge rail network has been made safer than ever before by unmanned gates: PM Modi
Opposition parties spreading fake news that MSP will be withdrawn: PM Modi on new farm bill
I assure the farmers that the MSP will continue in future the way it is happening today. Government will continue purchasing their produces: PM

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோசி ரயில் மகாசேது திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். பிகாரில் புதிய ரயில் பாதைகள் மற்றும் மின்மயமாக்கல் திட்டங்களை பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். காணொலி மூலம் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.

நிகழ்ச்சில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, பிகாரில் ரயில்வே தொடர்பில் புதிய வரலாறு உருவாக்கப் பட்டிருப்பதாகக் கூறினார். கோசி மகாசேது மற்றும் கியூல் பாலம், மின்யமாக்கல் திட்டங்கள், ரயில்வேயில் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவித்தல், மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு டஜன் அளவிற்கான திட்டங்கள் உள்ளிட்ட ரூ.3000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கப் பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் பிகாரில் ரயில்வே தொடர்புகளை பலப்படுத்துவதாக மட்டுமின்றி, மேற்குவங்கம் மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங்களுக்கு இடையிலான ரயில் தொடர்பையும் பலப்படுத்தும் என்று அவர் கூறினார்.

பிகார் உள்ளிட்ட கிழக்குப் பகுதி மாநிலங்களில் ரயில் பயணிகளுக்குப் பயன்களை அளிக்கும் புதிய மற்றும் நவீன வசதிகளுக்காக பிகார் மக்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். பிகாரில் குறுக்கும் நெடுக்குமாக பல ஆறுகள் ஓடுவதால் மாநிலத்தின் பல பகுதிகள் போக்குவரத்துத் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன என்றும், ஆறுகளை சுற்றி வர அவர்கள் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டியுள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் பாட்னா மற்ரும் முங்கரில் பெரிய பாலங்கள் (மகாசேது) கட்டும் பணிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. இப்போது இந்த இரண்டு ரயில் பாலங்கள் தொடங்கப்படுவதன் மூலம், பிகாரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையிலான பயணம் எளிதாக மாறுகிறது என்று அவர் தெரிவித்தார். வளர்ச்சிக்கான புதிய உந்துதலை இது அளிக்கும், குறிப்பாக வடக்கு பிகாருக்கு புதிய உந்துதல் அளிப்பதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

எட்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தீவிர பூகம்பம் காரணமாக மிதிலா மற்றும் கோசி பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டன. கொரோனா போன்ற கொள்ளைநோய் பரவும் காலத்தில் இந்த இரு பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. குடிபெயர்ந்த தொழிலாளர்களின் கடின உழைப்பில் உருவான சுப்பாவுல் – அசன்புர் – குஃபா ரயில் பாதை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. பாலம் கட்டும் பணியிலும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். திரு. அட்டல் பிகாரி வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது 2003-ல் இத் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது திரு. நிதிஷ்குமார் ரயில்வே அமைச்சராக இருந்தார். மிதிலா மற்றும் கோசி பகுதி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் இத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுப்பாவுல் – அசன்புர் – குஃபா ரயில் பாதை பணி முடிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கோசி மகாபாலம் வழியாக சுபாவுல்-அசன்புர் இடையில் புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் சுபாவுல், அராரியா, சஹார்ஸா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மாற்று ரயில் வழித்தடமாகவும் இது அமையும். 300 கிலோ மீட்டர் தொலைவுக்கான பயணம், இந்த மகா பாலம் வந்த பிறகு 22 கிலோ மீட்டராகக் குறைந்துள்ளது. அந்தப் பகுதியில் வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகள் இதனால் பெருகும். பிகார் மக்களுக்கு இதனால் நேரமும் பணமும் மிச்சமாகும் என்று பிரதமர் கூறினார்.

கோசி மகா பாலத்தைப் போல, கியூல் ஆற்றின் மீதான புதிய ரயில் வழித்தடத்தில், எலெக்ட்ரானில் இன்டர்லாக் வசதியுடன் ஓடும் ரயில்கள், அந்த வழித்தடம் முழுவதிலும் ஒரு மணி நேரத்திற்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் என்று பிரதமர் கூறினார். ஹௌரா – டெல்லி இடையே பிரதான பாதையில் ரயில்கள் பயண நெரிசலை குறைக்க எலெக்ட்ரானிக் இன்டர்லாக் வசதி உதவும். இதனால் தேவையில்லாத தாமதங்கள் தவிர்க்கப்படும். பயணம் பாதுகாப்பானதாக இருக்கும்.

புதிய இந்தியா என்ற உயர் விருப்ப நோக்கத்தின்படி இந்திய ரயில்வே துறையை உருவாக்க கடந்த 6 ஆண்டுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பிரதமர் கூறினார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாகவும் இது இருக்கும் என்றார் அவர். முன் எப்போதையும்விட இந்திய ரயில்வே அதிக தூய்மையாக உள்ளது என்று அவர் கூறினார். அகல ரயில் பாதை வழித்தடங்களில் ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மாற்றப்பட்டதை அருத்து இந்திய ரயில்வே பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது.. ரயில்களின் வேகம் அதிகரித்துள்ளது. வந்தே பாரத் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில்கள், தற்சார்பு மற்றும் நவீனத்தவத்தின் அடையாளச் சின்னங்களாக உள்ளன என்றும் கூறினார்.

ரயில்வே நவீனமயமாக்கல் மூலம் அதிக  பலன்களை பிகார் பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க, மாதேபுராவில் எலெக்ட்ரிக் லோகோ தொழிற்சாலையும், மர்ஹௌராவில் டீசல் லோகோ தொழிற்சாலையும் தொடங்கப்பட்டன. இந்த இரு திட்டங்களிலும் ஏறத்தாழ ரூ.44000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த – 12000 குதிரை சக்தித் திறன் கொண்ட – மின்சார என்ஜின் பிகாரில் தயாரிக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து பிகார் மக்கள் பெருமைப்படுவார்கள். பிகாரின் முதலாவது ரயில் என்ஜின் தயாரிப்பு நிலையம் செயல்படத் தொடங்கிவிட்டது.

பிகாரில் 90 சதவீத ரயில் பாதைகள் மின்யமாக்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 6 ஆண்டு காலத்தில் 3000 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தொலைவுக்கு பிகாரில் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 2014க்கு முந்தைய 5 ஆண்டுகளில் பிகாரில் 325 கிலோ மீட்டர் நீளத்துக்குப் புதிய ரயில் பாதைகள் தொடங்கப்பட்டன. 2014க்குப் பிந்தைய 5 ஆண்டு காலத்தில் 700 கிலோ மீட்டர் அளவுக்குப் புதிய ரயில் பாதைகள் தொடங்கப்பட்டன. இது முந்தைய காலத்தைவிட ஏறத்தாழ இரு மடங்கு என்று கூறிய அவர், இன்னும் ஆயிரம் கிலோ மீட்டர் அளவுக்கு புதிய ரயில் பாதைகளுக்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஹாஜிபுர் – கோஸ்வர் – வைஷாலி ரில் பாதை தொடங்கப்படுவதால் டெல்லியும் பாட்னாவும் நேரடி ரயில் சேவை மூலம் இணைக்கப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். வைஷாலியில் சுற்றுலாவுக்கு அதிக உத்வேகம் கிடைக்க இது உதவும் என்பதுடன், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். சரக்கு ரயில்களுக்கான தனி ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், அதில் 250 கிலோ மீட்டர் தொலைவுக்கான பாதை பிகாரில் இருப்பதாகவும் கூறினார். இந்தத் திட்டம் நிறைவுபெற்றால், பயணிகள் ரயில்கள் தாமதம் ஆவது குறையும் என்றும், சரக்கு ரயில்களின் காலதாமதமும் பெருமளவுக்குக் குறையும் என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடி காலத்திலும் ஓய்வின்றி உழைத்தமைக்காக ரயில்வே துறைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். குடிபெயர்ந்த தொழிலாளர்களை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் ரயில்வே பெரும் பங்காற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் முதலாவது கிசான் ரயில் பிகார் மற்றும் மகாராஷ்டிரா இடையே கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

முன்பு பிகாரில் ஒரு சில மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இருந்தன. இதனால் நோயாளிகளுக்கு நிறைய அசவுகரியங்கள் ஏற்பட்டன. அதிக மதிப்பெண்கள் பெற்றாலும், மருத்துவ படிப்புகளுக்காக பிகார் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது பிகாரில் 15க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கடந்த சில ஆண்டுகளில் உருவானவை. சில தினங்களுக்கு முன்பு தர்பாங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், ஆயிரக்கணக்கான புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

 

வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா

வேளாண்மை சீர்திருத்தங்கள் விஷயத்தில் நேற்றைய நாள் நாட்டின் வரலாற்று முக்கியத்துவமான நாள் என்று பிரதமர் கூறினார். நமது விவசாயிகள் பலவிதமான கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கும் வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக விவசாயிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். தங்கள் விளைபொருட்களை விற்பதற்கான சுதந்திரம் இதன் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும். விவசாயிகளின் வருமானத்தில் பெரும் பகுதியை கமிஷனாக சம்பாதித்து வரும் இடைத்தரகர்களின் குறுக்கீடுகளில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பிரதமர் கூறினார்.

வேளாண்மை சீர்திருத்தங்கள் மசோதா குறித்து பொய்களைப் பரப்பும் செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன என்று பிரதமர் குற்றஞ்சாட்டினார். பல தசாப்த காலங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள், வேளாண்மை விஷயத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள் என்றார் அவர். இப்போது சீர்திருத்தங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும், ஏ.பி.எம்.சி. சட்டத்தில் வேளாண்மை மார்க்கெட் விதிமுறைகள் திருத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த என்பதை அவர் சுட்டிக்காட்டினார். குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அரசு வழங்காது என்ற குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையின் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலைகள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்றும், முன்பிருந்ததைப் போல அரசு கொள்முதல் தொடரும் என்றும் அவர் கூறினார்.  புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது, விவசாயிகள் அறுவடை செய்து தங்கள் விளை பொருளை தாங்கள் விரும்பும் விலைக்கு நாட்டில் எந்தவொரு மார்க்கெட்டிலும் விற்க முடியும் என்று அவர் தெரிவித்தார். ஏ.பி.எம்.சி. சட்டத்தின் கேட்டை உணர்ந்த காரணத்தால், பிகார் முதல்வர் இந்த மாநிலத்தில் அதை ரத்து செய்துவிட்டார் என்று பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த பிரதமரின் கிசான் கல்யாண் யோஜ்னா, பிரதமரின் கிரிஷி சின்சாய் யோஜ்னா, வேம்பு தடவிய யூரியா, குளிர்பதனக் கிடங்கு நெட்வொர்க் உருவாக்கும் பணிகள், உணவு பதப்படுத்தல் தொழில்கலில் முதலீடு, வேளாண்மை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கம் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகப் பிரதமர் பட்டியலிட்டார்.

விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கு அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று அவர் தெரிவித்தார். கால்நடைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்க தேசிய அளவிலான இயக்கம் நடந்து வருகிறது. நாட்டின் விவசாயிகளுக்கு தெளிவான தகவலை அளிக்கும் வகையில், தவறாக வழிநடத்துபவர்கள் விஷயத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். விவசாயிகளை பாதுகாப்பதாக சாமர்த்தியம் பேசும் அவர்கள் உண்மையில், பல கட்டுப்பாடுகளில் சிக்கிக் கிடக்கவே விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார். இடைத்தரகர்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள், விவசாயிகளின் வருமானத்தை கொள்ளையடிப்பவர்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள். இதுதான் நாட்டின் இப்போதைய தேவையாக உள்ளது. இந்த காலத்திற்கான தேவையாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.

 

Click here to read full text speech

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PLI, Make in India schemes attracting foreign investors to India: CII

Media Coverage

PLI, Make in India schemes attracting foreign investors to India: CII
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi congratulates hockey team for winning Women's Asian Champions Trophy
November 21, 2024

The Prime Minister Shri Narendra Modi today congratulated the Indian Hockey team on winning the Women's Asian Champions Trophy.

Shri Modi said that their win will motivate upcoming athletes.

The Prime Minister posted on X:

"A phenomenal accomplishment!

Congratulations to our hockey team on winning the Women's Asian Champions Trophy. They played exceptionally well through the tournament. Their success will motivate many upcoming athletes."