நிதி சார்ந்த தொழில்நுட்பம் (ஃபின்டெக்) குறித்த சிந்தனை மிக்க தலைமைத்துவ அமைப்பான இன்ஃபினிட்டி அமைப்பைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், பண நோட்டின் வரலாறு ஏராளமான பரிணாமத்தைக் காட்டுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு முதன் முறையாக ஏடிஎம் மூலம் பணம் திரும்பப் பெறுவதை விட செல்பேசி மூலமான பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. முழுமையான டிஜிட்டல் வங்கிகள், கட்டிடம் இல்லாமல் கிளை அலுவலகங்கள் செயல்படுவது ஏற்கனவே எதார்த்தமாகி உள்ளது. பத்து ஆண்டுகளுக்குள் இது பொதுவானதாக மாறிவிடும். “மனிதர்கள் பரிணாம வளர்ச்சிப் பெற்றது போல் நமது பரிமாற்ற வடிவங்களும் மாறியுள்ளன. பண்டமாற்று முறையிலிருந்து உலோகங்களுக்கு, நாணயங்களிலிருந்து நோட்டுகளுக்கு, காசோலைகளிலிருந்து அட்டைகளுக்கு என்றாகி இப்போது இங்கே நாம் வந்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
தொழில்நுட்பத்தை ஏற்றுப் பயன்படுத்துவதாக இருப்பினும் அல்லது புதிய கண்டுபிடிப்பாக இருப்பினும், எவருக்கும் சளைத்தது அல்ல என்பதை உலகிற்கு இந்தியா நிரூபித்திருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். டிஜிட்டல் இந்தியாவின் கீழ், மாற்றத்திற்கான முன்முயற்சிகள் நிதி சார்ந்த தொழில்நுட்பத் தீர்வுகளில் புதிய முயற்சிக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளன. இது நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது ஃபின்டெக் முன்முயற்சிகளை ஃபின்டெக் புரட்சியாக மாற்றுவதற்கான நேரம் இதுவாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார். “இந்தப் புரட்சி நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதி சார்ந்த அதிகாரத்தைப் பெறுவதற்கு உதவும்” என்று அவர் கூறினார்.
அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறைக்குத் தொழில்நுட்பம் எவ்வாறு கிரியா ஊக்கியாகவும் இருக்கிறது என்பதை விவரித்த திரு மோடி, 2014-ல் 50%-க்கும் குறைவான இந்தியர்கள் வங்கிக் கணக்குகளைக் கொண்டிருந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளில் 430 மில்லியன் ஜன்தன் கணக்குகளுடன் ஏறத்தாழ இந்தியாவில் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் உள்ளன என்றார். கடந்த ஆண்டு 1.3 பில்லியன் பணப்பரிவர்த்தனைகள் செய்துள்ள 690 மில்லியன் ரூபே அட்டைகள் போன்ற முன்முயற்சிகளையும் பட்டியலிட்ட அவர், கடந்த மாதம் மட்டும் யுபிஐ சுமார் 4.2 பில்லியன் பரிவர்த்தனைகளை செய்துள்ளது என்றார். ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி இணையப் பக்கத்தில் சுமார் 300 மில்லியன் விற்பனை ரசீதுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன; பெருந்தொற்று இருந்தபோதும் ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் சுமார் 1.5 மில்லியன் ரயில்வே பயணச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளன; கடந்த ஆண்டு ஃபாஸ்டேக் நடைமுறையில் 1.3 பில்லியன் தடையில்லா பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சிறு வியாபாரிகளுக்குப் பிரதமரின் ஸ்வநிதி மூலம் கடன் வழங்க முடிந்துள்ளது. கசிவுகள் இல்லாமல் குறிப்பிட்ட சேவைகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இ-ரூப்பி அடைய முடிந்துள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய, நிதி சார்ந்த நடைமுறை என்பது ஃபின்டெக் புரட்சியை நடத்துவது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். மேலும் இது பற்றி விவரித்தப் பிரதமர், ஃபின்டெக் என்பது வருவாய், முதலீடுகள், காப்பீடு மற்றும் நிறுவனங்களுக்கான கடன் என்ற 4 தூண்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. “வருவாய் அதிகரிக்கும் போது முதலீடு சாத்தியமாகிறது. காப்பீடு நிதி என்பது சவாலை மேற்கொள்ளும் திறனைப் பெற்றிருப்பதோடு முதலீடுகளாகவும் மாறுகிறது. நிறுவனங்களுக்கான கடன் விரிவாக்கத்திற்கு உதவி செய்கிறது. இந்தத் தூண்கள் ஒவ்வொன்றுக்கும் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த நிலைமைகள் எல்லாம் ஒன்றுசேரும் போது, ஏராளமான மக்கள் நிதித்துறையில் பங்கேற்பதை நீங்கள் காணமுடியும்” என்று பிரதமர் விவரித்தார்.
இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பொதுமக்களிடம் விரிவான ஏற்பினைப் பெற்றுள்ள நிலையில், ஃபின்டெக் மீதான நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளையும் இதுபோன்ற தொழில்நுட்பங்களையும் ஏற்றுக் கொள்வதன் மூலம் நமது ஃபின்டெக் நடைமுறை மீது சாமானிய இந்தியர்கள் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். “இந்த நம்பிக்கை பொறுப்புமிக்கதாகும். நம்பிக்கை என்பதன் பொருள் மக்கள் நலன்கள் பாதுகாக்கப்படுவதை நீங்கள் உத்தரவாதம் செய்வதன் தேவையாகும். ஃபின்டெக் பாதுகாப்பு கண்டுபிடிப்பு இல்லாமல் ஃபின்டெக் கண்டுபிடிப்பு பூர்த்தியாகாது” என்று அவர் கூறினார்.
ஃபின்டெக் விஷயத்தில் இந்தியாவின் அனுபவம் விரிவான ஏற்புடன் இருப்பதைப் பிரதமர் பாராட்டினார். அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும் உலகத்துடன் பகிர்ந்து கொள்வது, அதே போல் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது என்ற இந்தியாவின் மனப்போக்கினை அவர் எடுத்துரைத்தார். “நமது டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு தீர்வுகள் உலகம் முழுவதும் உள்ள குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்” என்று பிரதமர் கூறினார்.
குஜராத் சர்வதேச ஃபின்டெக் (ஜிஜஎஃப்டி) நகரம் என்பது வெறுமனே ஒரு வளாகம் அல்ல, அது இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது இந்தியாவின் ஜனநாயக மாண்புகள், தேவை, மக்கள் தொகை மற்றும் பன்முகத்தன்மையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் முதலீட்டுக்கான இந்தியாவின் வெளிப்படைத்தன்மையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. உலகளாவிய ஃபின்டெக் உலகத்திற்கு கிஃப்ட் நகரம் நுழைவு வாயிலாக இருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
“நிதி என்பது பொருளாதாரத்தின் உயிர்நாடி. தொழில்நுட்பம் என்பது அதன் வாழ்க்கை. இந்த இரண்டும் “அந்தியோதயாவையும், சர்வோதயாவையும்” அடைய சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை” என்று தெரிவித்துப் பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
கிஃப்ட் நகர் மற்றும் ப்ளூம்பெர்க் இணைந்து மத்திய அரசின் உதவியுடன் 2021 டிசம்பர் 3, 4 தேதிகளில் சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் இந்த நிகழ்வை நடத்தியது. இந்த அமைப்பின் முதலாவது சந்திப்பில் இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் ஆகியவை பங்கேற்கும் நாடுகளாக இருந்தன.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு சேவை செய்வதற்கான ஃபின்டெக் தொழில்முறையால் தொழில்நுட்பத்தையும், புதிய கண்டுபிடிப்பையும் எவ்வாறு ஊக்கப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கவும், செயல்பாட்டுக்கான சிந்தனைகளை வெளிக்கொண்டு வரவும், கொள்கை, வணிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலகின் முன்னணி சிந்தனையாளர்களை இன்ஃபினிட்டி அமைப்பு ஒன்று திரட்டியுள்ளது.
‘அப்பால்’ என்ற மையப் பொருளில் இந்த அமைப்பின் நிகழ்ச்சி நிரல் கவனம் செலுத்துகிறது; அனைவரையும் உள்ளடக்கிய நிதி சார்ந்த மேம்பாட்டிற்கு உலகளாவிய நிலைமையை மேம்படுத்துவதில் புவி எல்லைகளுக்கு அப்பால், அரசுகளோடும், வணிக அமைப்புகளோடும், கவனம் செலுத்துவதற்கான எல்லைகளுக்கு அப்பால் ஃபின்டெக்; நீடித்த வளர்ச்சியை உருவாக்கும் விண்வெளி தொழில்நுட்பம், பசுமைத் தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றிணைப்பைக் கொண்டிருக்கும், நிதிக்கு அப்பால் ஃபின்டெக்; எதிர்காலத்தில் ஃபின்டெக் தொழில் முறையின் தன்மை மற்றும் புதிய வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குவாண்டம் கம்ப்யூட்டிங் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் கவனம் செலுத்தும் அடுத்ததற்கு அப்பால் ஃபின்டெக் உள்ளிட்ட பல்வேறு துணை மையப் பொருள்கைளையும் கொண்டுள்ளது.
இந்த அமைப்பில் 70-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து பங்கேற்பு உள்ளது
The history of currency shows tremendous evolution.
— PMO India (@PMOIndia) December 3, 2021
As humans evolved, so did the form of our transactions.
From barter system to metals,
from coins to notes,
From cheques to cards,
Today we have reached here: PM @narendramodi
Last year, in India, mobile payments exceeded ATM cash withdrawals for the first time.
— PMO India (@PMOIndia) December 3, 2021
Fully digital banks, without any physical branch offices, are already a reality and may become commonplace in less than a decade: PM @narendramodi
India has proved to the world that it is second to none when it comes to adopting technology or innovating around it.
— PMO India (@PMOIndia) December 3, 2021
Transformational initiatives under Digital India have opened doors for innovative Fintech solutions to be applied in governance: PM @narendramodi
Now it is time to convert these fintech initiatives into a fintech revolution.
— PMO India (@PMOIndia) December 3, 2021
A revolution that helps to achieve financial empowerment of every single citizen of the country: PM @narendramodi
We believe in sharing our experiences and expertise with the world and learning from them as well.
— PMO India (@PMOIndia) December 3, 2021
Our Digital Public Infrastructure solutions can improve the lives of citizens around the world: PM @narendramodi
GIFT City is not merely a premise, it represents India.
— PMO India (@PMOIndia) December 3, 2021
It represents India’s democratic values, demand, demography & diversity.
It represents India’s openness to ideas, innovation & investment.
GIFT City is a gateway to the global fintech world: PM @narendramodi