புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலக புத்தர் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்தப் பிரதமர், புத்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 19 தலைசிறந்த புத்த பிட்சுகளுக்குப் பிரதமர் புத்தபிட்சு அங்கிகளை வழங்கினார்.
இந்த நிகழ்சியில் பேசிய பிரதமர், இந்த உலக புத்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவிற்கு உலகின் பல திசைகளில் இருந்து வருகை தந்திருக்கும் அனைவரையும் நான் வரவேற்கிறேன். விருந்தினர்கள், இறைவனுக்கு சமம் என்பதை அடிக்கோடிட்டு காட்டியப் பிரதமர், இந்தப் புத்த பூமியின் பாரம்பரியமும் இதுதான். புத்தரின் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கி வாழ்ந்த பலர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இருப்பது, இங்கு புத்தர் நம்மிடையே இருப்பதாக உணர்கிறேன். புத்தர் தனிநபர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டவர். அது ஒரு ஞானமாகும். எல்லையற்ற ஞானமாகும். அவர் மேம்பட்ட சிந்தனை வடிவானவர். எல்லையில்லா வகையில், எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வே புத்தராவார். புத்தரின் ஞானம் அழிவே இல்லாதது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள பலதரப்பட்ட மக்கள், புத்தரின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமையப்பெற்று, ஒரு இழையில் மனித நேயம் இணைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சிந்தனையாற்றலின் பலம், உலகளவில் புத்தரின் கொள்கைகளை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் தீர்மானமானது உலக மேம்பாட்டிற்காக செயல்படுகிறது. இந்த உலக புத்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவின் மூலம், அனைத்து தேசங்களுக்கும் ஒரு சிறந்த தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் நம்பிக்கைக் கொள்கிறேன். இந்த முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த மத்திய கலாச்சாரம் அமைச்சகம் மற்றும் சர்வதேச புத்த கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்த மதத்தோடு தனக்கான தனிப்பட்ட முறையிலான இணைப்பு வாட்நகர் மூலம் அமையப்பெற்றிருந்ததை அடிக்கோடிட்டு காண்பித்தப் பிரதமர், தான் அங்கு பிறந்ததோடு மட்டுமின்றி, அந்த முக்கிய புத்தமத மையத்திற்கு யுவான் சுவாங் வருகை தந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். சாரநாத் பின்புலத்தில் காசியின் தொடர்பை குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, புத்தமத பாரம்பரியத்திற்கான இணைப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது என்று குறிப்பிட்டார்.
நம் நாடு சுதந்திரம் அடைந்து 75-வது விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்தில், இந்தியாவின் எதிர்காலத்திற்கான முக்கிய நோக்கம் மற்றும் உலக நன்மைக்கான புதிய தீர்மானங்கள் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். சமீபத்தில் பல்வேறு துறைகளில் உலக அளவில் இந்தியா பெற்றிருக்கும் சாதனைகளுக்கு புத்தரின் உணர்வுகள் மற்றும் உத்வேகம் தான் காரணம் என்றார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக புத்தரின் கொள்கை, பயிற்சி மற்றும் உள்ளுணர்தல் போன்றவைகளை உள்ளடக்கியே இந்தியாவின் பயணம் அமைந்துள்ளது. புத்தரின் கோட்பாடுகளை முழுமனதோடும், அர்ப்பணிப்போடும், பரப்புவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் உள்ள புத்தமத மையங்களுக்கிடையிலான தொடர்பை மேம்படுத்துதல், சாரநாத் மற்றும் குஷிநகர் புனரமைத்தல், குஷிநகர் சர்வதேச விமானநிலையம், லும்பினியில் உள்ள சர்வதேச புத்தக் கூட்டமைப்போடு இணைந்து இந்திய சர்வதேச புத்த கலாச்சார மையம் ஆகியவற்றை மேம்படுத்துதல் குறித்து பிரதமர் பேசினார்.
மனித இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து, போதனைகளை தந்திருக்கும் புத்தர், இந்தியாவை கருத்தில் கொண்டே குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று பிரதமர் பெருமையடைந்ததாக தெரிவித்துள்ளார். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களின் போது, மீட்பு நடவடிக்கையில் இந்தியா முழு மனதோடு மேற்கொண்ட செயல்பாடுகள் மற்றும் அமைதிக்கான இயக்கங்கள் குறித்து பிரதமர் பேசினார். இதன் மூலம் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் அறியப்பட்டு, உணரப்பட்டு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றார். சர்வதேச புத்த கூட்டமைப்பு போன்ற தளங்கள் மூலம் ஒரே சிந்தனையாற்றல் மற்றும் ஒருமித்த கருத்துக்கொண்ட நாடுகள் புத்தத் தருமத்தையும், அமைதியையும் நிலைநாட்டுகிறது என்றார்.
பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் பாதையே புத்தரின் பாதையாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். புத்தரின் வாழ்க்கைப் பயணத்தைக் குறிப்பிட்டப் பிரதமர், அடுத்தவர்களின் வாழ்வில் உள்ள வலிகளை நன்குணர்ந்த புத்தர், தனது அரண்மனை மற்றும் ராஜ்ஜியத்தை விட்டு வெளியே வந்தார். சுயநலம், குறுகிய எண்ணம் போன்றவைகளை தவிர்த்து, உலகளாவிய நன்மைக்கான எண்ணம் என்ற புத்தரின் மந்திரத்தை ஏற்பதே வளமான உலகை உருவாக்குவதின் நோக்கமாகும். ஆதாரக்குறைப்பாடுகளை எவ்விதம் எதிர்நோக்குகிறோம் என்பதை பொறுத்தே, நிலையான உலகை உருவாக்க முடியும் என்ற கருத்தை பிரதமர் வலியுறுத்தினார். ஒவ்வொரு தனிநபர் மற்றும் தேசத்தின் முன்னுரிமை உலக நலனோடு சேர்த்து நாட்டு நலத்துடன் இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.
இந்த நூற்றாண்டின் மிகவும் சவால் நிறைந்த நேரத்தைக் குறிப்பிட்டப் பிரதமர், போர், பொருளாதார நிலையற்ற தன்மை, மதவெறி, பருவநிலை மாற்றத்தின் விளைவாக உயிரினங்கள் மறைவதும், பனிப்பாறைகள் உருகுவதும் போன்றவைகள் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மத்தியில் புத்தரை நம்பும் மனிதர்கள், அனைத்து உயிரினங்களின் நலன்களுக்காக செயல்படுகிறார்கள். இந்த நம்பிக்கைத்தான் பூமியின் மிகப்பெரிய வலிமையாகும். இந்த நம்பிக்கை ஒன்றிணைந்து புத்தரின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் போது, மனித இனத்திற்கான நம்பிக்கையை உணர செய்யும் விதத்தில் அமையும் என்றார்.
இன்று உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் புத்தர் தீர்வுகளை கொண்டிருந்தார் என்றார். போர் நடவடிக்கைகள், வெற்றி -தோல்விகளை துறப்பதன் மூலம் உலக அமைதி ஏற்படும் என்பதை புத்தர் போதித்தார் என்று பிரதமர் குறிப்பிட்டார். பகையை பகையால் எதிர்கொள்வதைத் தவிர்த்து, ஒற்றுமையில் தான் மகிழ்ச்சி நிறைந்துள்ளது என்றார். இதையே, புத்தர் தனது போதனைகள் மூலமாக, முதலில் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதற்கு முன், தனது நடவடிக்கைகளை கருத்தில்கொள்ள வேண்டும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தன்னுடைய கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் அச்சுறுத்தும் போக்கு நிலவுகிறது என்றார். புத்தரின் மிகவும் பிரபலமான போதனை, உங்கள் உணர்வு ஒளி ஆற்றல் மூலமாக இறைவன் கோட்பாடுகளை உலகளாவிய இருப்பை உணருங்கள் என்றார். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஐநா சபை, யுத்தத்தைப் பற்றியல்ல, புத்தரைப்பற்றி உலகத்திற்கு அறிவித்தது நம்நாடு தான் என்று கூறியதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
புத்தரின் பாதையானது எதிர்காலம் மற்றும் நிலைத்தன்மைத் தொடர்பான பாதையாகும். புத்தரின் போதனைகளை உலகம் பின்பற்றி இருந்தால், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்தித்திருக்காது. அதாவது, தேசங்கள் மற்ற நாடுகளைப் பற்றியும், எதிர்கால சந்ததியினரைப்பற்றியும் சிந்திப்பதை நிறுத்தி விட்டன. இந்த தவறை மிகப்பெரிய அளவில் உருமாறி மோசமான விளைவுகளை எதிர்நோக்கியுள்ளது. சுய லாபமில்லாத நன்னடத்தையுடன் செயல்பட்டு, அனைவரும் நலத்துடன் வாழ வேண்டும் என்றே புத்தர் போதித்தார்.
இந்தப் பூமிக்கு ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அது வாழ்வியல் முறை, உணவு, பயண பழக்கவழக்கங்கள் மூலமாக பருவ நிலை மாற்றத்திற்கு காரணியாக அமைகின்றன. புத்தரின் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் விளைந்த சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் முறை இயக்கத்தைப்பற்றி குறிப்பிட்ட பிரதமர், மக்கள் சூழ்நிலைகளை உணர்ந்து, தங்களது வாழ்வியல் முறையை மாற்றியமைக்கும் போது, பருவ நிலை தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும். புத்தரின் உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கமானது, புத்தரின் சிந்தனைகளை மேலும் மேன்மையடைய செய்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
உலக இன்பங்கள் மற்றும் சுயநலம் போன்றவற்றில் இருந்து வெளிவருவதை வலியுறுத்தி பேசிய பிரதமர், புத்தர் இதற்கு அடையாளமாக மாறியதோடு மட்டுமல்லாமல், பிரதிபலிப்பாக விளங்கினார். அதாவது பின்னோக்கி பார்ப்பதை தவிர்த்து முன்னேறி செல்வதை நினைவில் கொள்ள வேண்டும் என்ற வார்த்தைகளை பின்பற்றினால் மட்டுமே, புத்தரின் தீர்மானம் முழுமைப்பெறும் என்றார். அனைவரும் ஒன்றிணையும் போது, இந்த தீர்மானங்கள் மிக பெரிய அளவில் வெற்றியடையும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர்கள் திரு அர்ஜூன் ராம் மேக்வால், திருமதி மீனாட்சி லேகி, சர்வதேச புத்த கூட்டமைப்பின் பொதுச்செயலர் டாக்டர் தம்மபியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பின்னணி
இந்த இரண்டு நாள் உச்சி மாநாட்டை மத்திய கலாச்சார அமைச்சகமும், சர்வதேச புத்த கூட்டமைப்பும் இணைந்து ஏப்ரல் 20,21 ஆகிய தேதிகளில் நடத்தி வருகிறது. இந்த உலக புத்த உச்சிமாநாட்டின் கருப்பொருள்,“ சமகால சவால்களுக்கு எதிர்வினைகள்: தத்துவம் முதல் வழக்கமான செயல்பாடு வரை”
இந்த உச்சிமாநாட்டின் நோக்கம், உலக அளவில் புத்தர் கொள்கைகள் தொடர்பான தலைமைப்பண்பு கொண்டவர்கள் மற்றும் அறிஞர்கள் மூலமாக உலக பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிக்கும் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு தேவையான தகவல்களை வழங்குவதாகும். இந்த உச்சிமாநாட்டில் நடைபெறும் விவாதங்கள் மூலம், புத்தர் கொள்கைகள் மட்டும் தான், அடிப்படையில் உத்வேகத்தையும், வழிகாட்டுதல்களையும் இந்த சமகால கட்டமைப்பில் உருவாக்கும்.
உலகம் முழுவதிலும் இருந்து தலைசிறந்த அறிஞர்கள், சங்கத்தலைவர்கள், தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு உலகளாவிய மதிப்புகளின் அடிப்படையிலான புத்தர் கொள்கைகள் மூலம், உலகளாவிய பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும். விவாதங்கள் நான்கு கருப்பொருளில் நடைபெற்றது: புத்தர் கோட்பாடுகள் மற்றும் அமைதி; புத்தர் கொள்கை: சுற்றுச்சூழல் சவால்கள் சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை; நாளந்தா புத்தர் பாரம்பரியத்தை பாதுகாத்தல்; புத்தர் கோட்பாட்டு புனித யாத்திரை, புத்தரின் பாரம்பரியம் மற்றும் உணர்வு பூர்வமான மதிப்பு: தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளோடு இந்தியாவின் நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார இணைப்புகள்.
बुद्ध व्यक्ति से आगे बढ़कर एक बोध हैं।
— PMO India (@PMOIndia) April 20, 2023
बुद्ध स्वरूप से आगे बढ़कर एक सोच हैं।
बुद्ध चित्रण से आगे बढ़कर एक चेतना हैं। pic.twitter.com/ipGZreYYaS
Inspired by teachings of Lord Buddha, India is taking new initiatives for global welfare. pic.twitter.com/KLlHv9eJ6K
— PMO India (@PMOIndia) April 20, 2023
हमने भगवान बुद्ध के मूल्यों का निरंतर प्रसार किया है। pic.twitter.com/Sfp6ehuid2
— PMO India (@PMOIndia) April 20, 2023
भारत विश्व के हर मानव के दुःख को अपना दुःख समझता है। pic.twitter.com/zXuyTIjNc2
— PMO India (@PMOIndia) April 20, 2023
समस्याओं से समाधान की यात्रा ही बुद्ध की यात्रा है। pic.twitter.com/nMxaLFJzMr
— PMO India (@PMOIndia) April 20, 2023
आज दुनिया जिस युद्ध और अशांति से पीड़ित है, बुद्ध ने सदियों पहले इसका समाधान दिया था। pic.twitter.com/cmPMsYMgIk
— PMO India (@PMOIndia) April 20, 2023
भारत ने दुनिया को युद्ध नहीं बुद्ध दिए हैं। pic.twitter.com/lXWNyN9yF1
— PMO India (@PMOIndia) April 20, 2023
बुद्ध का मार्ग भविष्य का मार्ग है, sustainability का मार्ग है। pic.twitter.com/XEdTYcPWyn
— PMO India (@PMOIndia) April 20, 2023