குஜராத் மாநிலம் நவ்சாரியில் ரூ.47,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மின் உற்பத்தி, ரயில், சாலை, ஜவுளி, கல்வி, குடிநீர் விநியோகம், போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியது இந்தத் திட்டங்கள் ஆகும்.
அப்போது உரையாற்றிய பிரதமர், வதோதரா, நவ்சாரி, பரூச், சூரத் ஆகிய இடங்களில் ஜவுளி, மின்சாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு ஆகிய துறைகளில் இன்று ரூ.40,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக குடிமக்களை பிரதமர் பாராட்டினார்.
குஜராத்தின் ஜவுளித் தொழிலின் பங்கைச் சுட்டிக்காட்டிய பிரதமர், சூரத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளியின் தனித்துவமான அடையாளம் பற்றிப் பேசினார். பிரதமரின் மித்ரா பூங்கா நிறைவடைந்திருப்பதன் மூலம், இந்தப் பகுதியின் தோற்றம் மாறும் என்றும், அதன் கட்டுமானத்திற்காக மட்டுமே ரூ.3,000 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரூ.800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான தபி ஆற்று தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், சூரத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும், வெள்ளம் போன்ற சூழ்நிலைகளைத் தடுக்கவும் உதவும் என்றும் கூறினார்.
அன்றாட வாழ்க்கையிலும், தொழில் வளர்ச்சியிலும் மின்சாரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், குஜராத்தில் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதைக் குறிப்பிட்டார்.
அணுசக்தி மின் உற்பத்தி பற்றி விவரித்த பிரதமர், கக்ரபார் அணுமின் நிலையத்தின் 3-வது அலகு மற்றும் 4-ல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு புதிய உள்நாட்டு அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகள் பற்றிப் பேசினார். இந்த அணு உலைகள் தற்சார்பு இந்தியாவின் எடுத்துக்காட்டுகள் என்றும், குஜராத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
வளர்ந்து வரும் நவீன உள்கட்டமைப்புடன் தெற்கு குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்ற தனது உத்தரவாதத்தை பிரதமர் மீண்டும் குறிப்பிட்டார்.
பழங்குடியினர் பகுதிகளில் அரிவாள் செல் இரத்த சோகை குறித்த முக்கிய பிரச்சினை குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்த நோயை ஒழிக்க தேசிய அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார். முதலமைச்சராக தாம் பதவி வகித்தபோது, அரிவாள் செல் ரத்த சோகையை எதிர்கொள்ள மாநிலத்தின் செயலூக்கமான நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட பிரதமர், நோயைத் திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கான பரந்த தேசிய முயற்சிகளையும் பட்டியலிட்டார். "அரிவாள் செல் ரத்த சோகையிலிருந்து விடுபடுவதற்கான தேசிய இயக்கத்தை நாங்கள் இப்போது தொடங்கியுள்ளோம்" என்று பிரதமர் திரு மோடி கூறினார்.
டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் வெற்றி மற்றும் நோக்கம் குறித்துச் சுட்டிக்காட்டிய பிரதமர், "இன்று உலகம் டிஜிட்டல் இந்தியாவை அங்கீகரிக்கிறது" என்றார். புதிய புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் உருவாவதன் மூலம் டிஜிட்டல் இந்தியா சிறிய நகரங்களை மாற்றியுள்ளது என்று அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற சிறிய நகரங்களில் புதிய நடுத்தர வர்க்கம் உருவாகி வருவது குறித்து பேசிய பிரதமர், இது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரச் சக்தியாக இந்தியாவை மாற்றும் என்றார்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் வளர்ச்சிக்கான வரைபடம் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். "இந்த 25 ஆண்டுகளில், நாங்கள் ஒரு வளர்ச்சியடைந்த குஜராத்தாகவும், வளர்ச்சியடைந்த பாரதமாகவும் மாற்றுவோம்" என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டு தமது உரையை நிறைவு செய்தார்.
குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.ஆர்.பாட்டீல், குஜராத் அரசின் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
आज देश के छोटे शहरों में भी कनेक्टिविटी का शानदार इंफ्रास्ट्रक्चर बन रहा है। pic.twitter.com/frEzoI1Tv6
— PMO India (@PMOIndia) February 22, 2024
आज डिजिटल इंडिया ने छोटे शहरों को ट्रांसफॉर्म कर दिया है।
— PMO India (@PMOIndia) February 22, 2024
इन छोटे शहरों में नए स्टार्ट अप्स बन रहे हैं, स्पोर्ट्स के क्षेत्र में नए युवा सामने आ रहे हैं: PM @narendramodi pic.twitter.com/YJESvZvSW1
आज पूरी दुनिया में भारत की समृद्ध विरासत की गूंज सुनाई दे रही है: PM @narendramodi pic.twitter.com/GpYbG3EJUy
— PMO India (@PMOIndia) February 22, 2024