குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஓகா நிலப்பரப்பையும் பேட் துவாரகாவையும் இணைக்கும் சுதர்சன் சேது, வடினார் மற்றும் ராஜ்கோட்-ஓகா, ராஜ்கோட்-ஜெட்டல்சர்-சோம்நாத் மற்றும் ஜெட்டல்சார்-வான்ஸ்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தேசிய நெடுஞ்சாலை-927 இன் தோராஜி-ஜம்கண்டோர்னா-கலவாட் பகுதியை அகலப்படுத்துவதற்கும், ஜாம்நகரில் உள்ள பிராந்திய அறிவியல் மையம் மற்றும் ஜாம்நகரில் உள்ள சிக்கா அனல் மின் நிலையத்தில் வெளியேறும் உமிழ்வுகளிலிருந்து கந்தகக் கலவைகளை அகற்றும் செயல்முறை அமைப்பு நிறுவலுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கிருஷ்ணர் துவாரகா மாய் துவாரகாதீஷாக காட்சியளிக்கும் பூமியை வணங்கினார். இன்று காலை கோவிலில் தாம் செய்த பிரார்த்தனைகளை நினைவுகூர்ந்த அவர், ஆதி சங்கராச்சாரியார் நான்கு ‘பீடங்களில்’ அதாவது சாரதா பீடத்தை நிறுவியதால், தேசத்தின் மத வாழ்க்கையில் தீர்த்தத்தின் ஆழமான முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.
நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம், ருக்மணி தேவி கோயிலின் மகிமையையும் அவர் குறிப்பிட்டார். 'ராஷ்டிர காஜ்' நிகழ்ச்சியின் போது பல நம்பிக்கைக்குரிய இடங்களுக்குச் செல்வதற்கு சமீபத்தில் கிடைத்த வாய்ப்புகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.
நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வதற்காக இன்று கடலின் ஆழத்தில் இறங்கிய மறக்க முடியாத தருணம் குறித்து பிரதமர் பேசினார். அந்தக் கோயிலின் தொல்லியல் மற்றும் வேத முக்கியத்துவம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார்.
துவாரகா பகவான் விஸ்வகர்மாவால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையை அவர் குறிப்பிட்டார். துவாரகா நகரம், சிறந்த நகரத் திட்டமிடலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றார் பிரதமர். நீரில் மூழ்கிய நகரத்திற்குள் இறங்கியதும் தெய்வீகத்தின் பேராற்றல் ஆட்கொண்டது. பிரார்த்தனை செய்தேன், என்னுடன் எடுத்துச் சென்ற மயில் இறகுகளை வழங்கினேன்.
நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தைப் பற்றி நான் கேள்விப்பட்ட காலத்திலிருந்து, அங்கு சென்று தரிசனம் செய்ய விரும்பினேன்”பல வருடங்களாக இருந்த என் ஆசை நிறைவேறியது. என்று பிரதமர் கூறினார், தெய்வீக அனுபவத்தில் மூழ்கினார்.
நீரில் மூழ்கிய துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்யும் போது, 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் சாத்தியக்கூறுகள் தன் முன் தோன்றிக்கொண்டே இருந்தன என்பதைப்பற்றிக் கூறிய பிரதமர், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான தனது உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கூறினார்.
முன்னதாக சுதர்சன் சேதுவைத் திறந்து வைத்த பிரதமர், 6 ஆண்டுகளுக்கு முன்பு தாம் அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்தார்.
இந்தப் பாலம் ஓகா நிலப்பரப்பையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் என்றும், இதன் மூலம் துவாரகாதீஷின் தரிசனத்திற்கான இணைப்பை அதிகரிக்கும் அதே வேளையில் இப்பகுதியின் தெய்வீகத்தன்மையை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தம்மால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களைத் துவக்கி வைப்பதற்கான நம்பிக்கையை எடுத்துக்காட்டிய அவர், “இது மோடியின் உத்தரவாதம். ” சுதர்சன் சேது ஒரு பொறியியல் அற்புதம் என்று குறிப்பிட்ட பிரதமர், திறப்பு விழாவை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது, பாலம் மற்றும் அதன் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்ய பொறியியல் சமூகத்துக்கு அழைப்பு விடுத்தார்.
துவாரகா மற்றும் பேட் துவாரகா மக்கள் படகுகளை நம்பியிருப்பதாலும், நீண்ட சாலைப் பயணங்களாலும் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துரைத்த பிரதமர், அதிக அலைகளின் போது படகு சேவைகள் மூடப்படுவதால் மக்கள் சிரமப்படுகின்றனர் என்று கூறினார். தற்போதைய முதலமைச்சர் திரு.பூபேந்திர படேல் மேற்கொண்ட பணிகள் நிறைவடைந்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அவரது உறுதியைப் பாராட்டினார்.
பாலத்தை அனுமதிக்கக் கோரி, அப்போதைய மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இறுதியாக இன்று தம்மால் இந்தப் பணி நிறைவடைந்ததற்கு நன்றி தெரிவித்தார்.
"பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசீர்வாதத்துடன், அவரது வழிகாட்டுதலைப் பின்பற்றி, எனது பொறுப்பை நிறைவேற்றினேன்", என்று ஒரு மகிழ்ச்சியான தருணத்தைப் பற்றி பிரதமர் கூறினார்.
பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் பாலத்தில் மின்விளக்குகள் பயன்படுத்தப்படும் என்பது குறித்தும் அவர் கூறினார்.
சுதர்சன் சேதுவில் மொத்தம் 12 சுற்றுலா காட்சியகங்கள் கடலின் விரிவான காட்சியைத் தருவதாக அவர் தெரிவித்தார். தூய்மை இயக்கத்தை நோக்கி துவாரகா மக்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய பிரதமர், உலக அளவில் கவனத்தை ஈர்த்து வரும் தூய்மையின் அளவைப் பராமரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
புதிய இந்தியாவுக்கான தமது உத்தரவாதத்திற்கு வரும் எதிர்ப்பை நினைவு கூர்ந்த பிரதமர், மக்கள் தங்கள் கண் முன்னே புதிய இந்தியா உருவானதைக் காண்கிறார்கள் என்றார்.
அரசியல் விருப்பமின்மை மற்றும் வம்ச அரசியலின் சுயநலக் கருத்தில் ஏழைகளுக்கு உதவ விருப்பமின்மை காரணமாக இது முன்னர் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் கூறினார்.
இது வளர்ச்சிடைந்த பாரதத்தின் மகத்தான இலக்குகளுக்காக பொருளாதாரத்தின் அளவை சிறியதாக வைத்திருந்ததாகக் கூறிய அவர், முந்தைய ஆட்சிகளின் போது மீண்டும் மீண்டும் நடந்த மோசடிகளையும் விமர்சித்தார்.
2014 ஆம் ஆண்டு தாம் ஆட்சிக்கு வந்த போது நாட்டை யாரும் கொள்ளையடிக்க விடமாட்டோம் என்று தான் வழங்கிய வாக்குறுதியை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
"முந்தைய அரசுகளின் போது நடந்த ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான ஊழல்கள் அனைத்தும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன" என்று அவர் குறிப்பிட்டார், 10 ஆண்டுகளில் 5 வது பெரிய பொருளாதாரமாக நாடாக இந்தியா முன்னேறியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் விளைவாக, ஒருபுறம் பெரிய திட்டங்கள் மூலம் புதிய இந்தியாவின் வளர்ச்சியையும், மறுபுறம் தெய்வீக நம்பிக்கை மற்றும் புனிதத் தலங்கள் மீண்டும் தோன்றுவதைக் காணலாம் என்று பிரதமர் கூறினார்.
குஜராத்தில் இந்தியாவின் மிக நீளமான கேபிள் அடிப்படையிலான சுதர்சன் சேது, மும்பையில் உள்ள நாட்டின் மிக நீளமான கடல் பாலம், ஜம்மு காஷ்மீரில் செனாப்பில் கட்டப்பட்ட அற்புதமான பாலம், கட்டுமானத்தில் உள்ள தமிழ்நாட்டின் புதிய பாம்பன் பாலம், இது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலம் என உதாரணங்களை அவர் எடுத்துக் கூறினார்..
இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலம் அஸ்ஸாமில் உள்ளது. "இத்தகைய நவீன இணைப்பு ஒரு வளமான மற்றும் வலுவான தேசத்தை உருவாக்குவதற்கான வழி" என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.
நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கு இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், மேம்படுத்தப்பட்ட இணைப்பின் காரணமாக குஜராத் சுற்றுலாவின் மையமாக மாறியதை விளக்கினார்.
குஜராத்தின் புதிய ஈர்ப்பு குறித்து பேசிய பிரதமர், இன்று குஜராத்தில் 22 சரணாலயங்கள் மற்றும் 4 தேசிய பூங்காக்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான துறைமுக நகரமான லோதல் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. இன்று அகமதாபாத் நகரம், ராணி கி வாவ், சம்பானேர் மற்றும் தோலாவிரா ஆகியவை உலக பாரம்பரிய சின்னங்களாக மாறியுள்ளன.
சிவராஜ்புரி என்பது துவாரகாவில் உள்ள ஒரு நீலக்கொடி கடற்கரை. ஆசியாவின் மிக நீளமான ரோப்வே கிர்னாரில் உள்ளது. கிர் காடு மட்டுமே ஆசிய சிங்கங்களின் வாழ்விடமாகும்.
உலகின் மிக உயரமான சர்தார் சாகேப்பின் ஒற்றுமை சிலை ஏக்தா நகரில் உள்ளது. இன்று ரனோத்சவ் சமயத்தில் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளின் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்ச்சின் தோர்டோ கிராமம் உலகின் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நாடாபெட் தேசபக்தி மற்றும் சுற்றுலாவின் முக்கிய மையமாக மாறி வருகிறது என்று குறிப்பிட்டார்.
‘வளர்ச்சியுடன் பாரம்பரியம்’ என்ற மந்திரத்திற்கு ஏற்ப, நம்பிக்கை மையங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
துவாரகா, சோம்நாத், பாவகாத், மோதேரா மற்றும் அம்பாஜி போன்ற அனைத்து முக்கிய புனிதத் தலங்களிலும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிற்கு வருகை தரும் ஒவ்வொரு ஐந்தாவது சுற்றுலாப் பயணி குஜராத்திற்கு வருகை தந்ததாக அவர் கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 15.5 லட்சம் சுற்றுலா பயணிகள் குஜராத் வந்துள்ளனர். இ-விசா வசதிகளும் சுற்றுலா பயணிகளை குஜராத்திற்கு அழைத்து வருகின்றன, என்றார்.
"சௌராஷ்டிரா நிலம் உறுதியின் மூலம் சாதிப்பதற்கு ஒரு பெரிய உதாரணம்", பிராந்தியத்திற்கான ஒவ்வொரு வருகையும் எவ்வாறு புதிய ஆற்றலைத் தூண்டுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
சௌராஷ்டிரா மக்கள் ஒவ்வொரு துளி தண்ணீருக்காகவும் ஏங்கி புலம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இருந்த கடினமான காலங்களை நினைவுகூர்ந்த பிரதமர், சௌராஷ்டிராவில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு நீர் விநியோகத்திற்காக 1300 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணியை துவக்கிய சவ்னி யோஜனா திட்டம் குறித்து விளக்கினார்..
உரையை நிறைவு செய்த பிரதமர், சௌராஷ்டிராவின் முழுப் பகுதியும், குஜராத்தோடு, வரும் ஆண்டுகளில் வெற்றியின் புதிய உச்சங்களை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
‘’துவாரகாதீஷின் ஆசீர்வாதம் எங்கள் மீது இருக்கிறது. வளர்ச்சியடைந்த சௌராஷ்டிராவையும், வளர்ச்சியடைந்த குஜராத்தையும் ஒன்றாக உருவாக்குவோம்”என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு பூபேந்திர படேல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி ஆர் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி
துவாரகாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், ஓகா பெருநிலப்பகுதியையும், பேட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் இதுவாகும்.
சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை உள்ளது. நடைபாதையின் மேல் பகுதிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தப் பாலம் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, துவாரகா மற்றும் பேட்-துவாரகா இடையே பயணிக்கும் பக்தர்களின் நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும். பாலம் கட்டப்படுவதற்கு முன்பு, யாத்ரீகர்கள் பேட் துவாரகாவை அடைய படகுப் போக்குவரத்தை நம்ப வேண்டியிருந்தது. இந்த பாலம் தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் செயல்படும்.
வடினாரில் தற்போதுள்ள கடலோரப் பாதைகளை மாற்றுதல், தற்போதுள்ள பிரதான அல்லது கிளைக் குழாய்க்கு இடையேயான இணைப்பை கைவிடுதல் மற்றும் முழு அமைப்பையும் அருகிலுள்ள புதிய இடத்தில் மாற்றுவது ஆகியவற்றை உள்ளடக்கிய குழாய் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ராஜ்கோட் – ஓகா, ராஜ்கோட் – ஜெதல்சார் – சோம்நாத் மற்றும் ஜெதல்சார் – வன்ஜாலியா ரயில் மின்மயமாக்கல் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தேசிய நெடுஞ்சாலை எண் 927-ன் தோராஜி – ஜம்கந்தோர்னா – காலவாட் பிரிவை அகலப்படுத்தும் பணிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஜாம்நகரில் மண்டல அறிவியல் மையம்; ஜாம்நகர் சிக்கா அனல்மின் நிலையத்தில் வெளியேறும் உமிழ்வுகளிலிருந்து கந்தகக் கலவைகளை அகற்றும் செயல்முறை அமைப்பை நிறுவும் திட்டத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
मुझे बीते दिनों में देव-काज के निमित्त, देश के अनेक तीर्थों की यात्रा का सौभाग्य मिला है।
— PMO India (@PMOIndia) February 25, 2024
आज द्वारका धाम में भी उसी दिव्यता को अनुभव कर रहा हूं: PM @narendramodi pic.twitter.com/ZJVw2xbcb2
जिसका सपना देखा, जिसकी आधारशिला रखी, उसको पूरा किया: PM @narendramodi pic.twitter.com/j5zXB0al4Y
— PMO India (@PMOIndia) February 25, 2024
आधुनिक कनेक्टिविटी समृद्ध और सशक्त राष्ट्र के निर्माण का रास्ता है: PM @narendramodi pic.twitter.com/cyOWzxKL6h
— PMO India (@PMOIndia) February 25, 2024