“கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. நாம் 10 பில்லியன் டாலரில் இருந்து 80 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளோம். உயிரி தொழில்நுட்ப உலக சூழலில் முதல் 10 இடங்கள் குழுவில் இந்தியா சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை”
“கடந்த தசாப்தங்களில் நமது தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு நாம் கண்ட அதே மரியாதையையும் நற்பெயரையும் நமது உயிரி தொழில்நுட்பத்துறைக்கும், இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நாம் காண்கிறோம்”
“அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரம் இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு பொருத்தமானதாகும். இப்போது அனைத்து துறைகளும் ‘முழுமையான அரசின்’ அணுகுமுறையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது”
“60 பல்வேறு துறைகளில் 70,000 புதிய தொழில்முனைவோர் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்-கள் உயிரி தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவர்கள்”
“கடந்த ஆண்டில் மட்டும் 1100 உயிரி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்-கள் உருவாகியுள்ளனர்”
“அனைவரது முயற்சியின் உணர்வை பயன்படுத்தி எழுச்சியை பயன்படுத்தி, ஒருங்கிணைந்த தளங்கள் குறித்த சிறந்த தொழில்துறையினரை அரசு ஒன்றுசேர்த்து வருகிறது”
“உயிரி தொழில்நுட்பத்துறை மிகுந்த தேவை அதிகரிப்பு துறைகளில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக இந்தியாவில் எளிதாக வாழும் பிரச்சாரங்கள், உயிரி தொழில்நுட்பத்துறைக்கான புதிய வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளன”

பிரதமர் திரு நரேந்திர மோடி பிரகதி மைதானத்தில் இன்று உயிரி தொழில்நுட்ப புத்தொழில் கண்காட்சி-2022-ஐ தொடங்கிவைத்தார். அவர் உயிரி தொழில்நுட்ப தயாரிப்பு இ-தளத்தையும் தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்ப துறைகளுடன் தொடர்புடையவர்கள், வல்லுனர்கள், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், “கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் உயிரி பொருளாதாரம் 8 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. நாம் 10 பில்லியன் டாலரில் இருந்து 80 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளோம். உயிரி தொழில்நுட்ப உலக சூழலில் முதல் 10 இடங்கள் குழுவில்  இந்தியா சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்று கூறினார். நாட்டில் உயிரி தொழில்நுட்ப துறையின் மேம்பாட்டுக்கு, உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் (பிஐஆர்ஏசி) பங்களிப்பு பற்றி பிரதமர் குறிப்பிட்டார். இப்போதைய அமிர்தகாலத்தில் நாடு புதிய உறுதிகளை மேற்கொண்டுள்ள போது, உயிரி தொழில்நுட்பத்தின் பங்கு நாட்டின் வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

 உலக அரங்கில் இந்திய வல்லுனர்களுக்கு நற்பெயர் வளர்ந்து வருவது குறித்து குறிப்பிட்ட பிரதமர், “நமது ஐடி வல்லுநர்களின் திறமை மற்றும் புத்தாக்கத்தில் உலகிற்கு இருந்த நம்பிக்கை புதிய உச்சத்தில் உள்ளது அதே நம்பிக்கையும், நற்பெயரும் இந்த பத்தாண்டில் இந்திய உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் உயிரி தொழில்நுட்பத்துறை வல்லுநர்களுக்கு ஏற்பட்டிருப்பதை நாம் கண்டுவருகிறோம்” என்று கூறினார்.

உயிரி தொழில்நுட்பத்துறையில் இந்தியா வாய்ப்புகளின் பூமியாகக் கருதப்படுவதற்கு ஐந்து பெரிய காரணங்கள் உள்ளன என்று பிரதமர் கூறினார். முதலாவது- மாறுபட்ட மக்கள்தொகை மற்றும் மாறுபட்ட காலநிலை மண்டலங்கள், இரண்டாவது- இந்தியாவின் திறமையான மனித ஆற்றல் தொகுப்பு, மூன்றாவது- இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதற்கான முயற்சிகள். நான்காவது- இந்தியாவில் உயிரி தயாரிப்புகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஐந்தாவது- இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அதன் சாதனை.

இந்தியப் பொருளாதாரத்தின் ஆற்றல் மற்றும் சக்தியை மேம்படுத்த அரசு அயராது உழைத்துள்ளதாக பிரதமர் கூறினார். ‘அரசின் முழு அணுகுமுறை’ மீது அழுத்தம் உள்ளதாக அவர் கூறினார்.  அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரம் இந்தியாவின் பல்வேறு துறைகளுக்கு பொருத்தமானதாகும் என்று அவர் கூறினார். சில துறைகள் மீது மட்டும் கவனம் செலுத்தப்படும்போது, இதன் முடிவு மாறாக இருக்கும். இதனால் மற்றவை விடுபடும். இன்று ஒவ்வொரு துறையும் நாட்டின் வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளித்து வருகின்றன. அதனால் தான் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி என்பது இன்றைய தேவையாக உள்ளது. இந்த எண்ணத்தில் ஏற்பட்டுள்ள அணுகுமுறையும், பலன்களை வழங்கிவருகின்றன என்று அவர் தெரிவித்தார். சமீபத்திய ஆண்டுகளில் ஏராளமான துறைகளை கவனம் செலுத்தப்பட்டு வருவதற்கான உதாரணங்களை அவர் எடுத்துக்கட்டினார்.

 உயிரி தொழில்நுட்பத்துறையிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது ஸ்டார்ட்அப் சூழலில் தெளிவாக வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “கடந்த 8 ஆண்டுகளில் நாட்டில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை சில நூறுகளிலிருந்து 70,000 ஆக உயர்ந்துள்ளது. 70,000 புதிய தொழில்முனைவோர் 60 பல்வேறு துறைகளில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்-கள் உயிரி தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவர்கள்.  ஒவ்வொரு 14 ஸ்டார்ட்அப்புக்கும் ஒருவர் உயிரி தொழில்நுட்பத்தை சேர்ந்தவராக உள்ளார்”. “கடந்த ஆண்டில் மட்டும் 1100 உயிரி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்-கள் உருவாகியுள்ளனர்” என்று பிரதமர் தெரிவித்தார். திறமை மாற்றம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், உயிரி தொழில்நுட்பத்துறையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9 மடங்கு உயர்ந்துள்ளது என்றும் உயிரி தொழில்நுட்ப வழிகாட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு தேவையான நிதியும் 7 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். உயிரி தொழில்நுட்ப வழிகாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-ன் 6-லிருந்து தற்போது 75 ஆக அதிகரித்துள்ளது. உயிரி தொழில்நுட்ப உற்பத்தி பொருட்கள் 10-ல் இருந்து தற்போது 700 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.  

அரசை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மீறும் வகையில், துறைகளுக்கு இடையிலான புதிய புள்ளிகளை வழங்கும் கலாச்சாரத்தை அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். பிஐஆர்ஏசி போன்ற தளங்கள்  இதற்காக பலப்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் பல துறைகள் இந்த அணுகுமுறையை காண்கின்றன. ஸ்டார்ட் அப்களுக்கான ஸ்டார்ட்அப் இந்தியாவை அவர் உதாரணம் காட்டினார். விண்வெளித் துறைக்கான இன்-ஸ்பேஸ், பாதுகாப்பு ஸ்டார்ட்அப்களுக்கான ஐடெக்ஸ், செமி கண்டக்டர்களுக்கான இந்தியா செமிகண்டக்டர் மிஷன், இளைஞர்களிடையே புதுமைகளை ஊக்குவிக்கும் ஸ்மார்ட் இந்தியா ஹெக்கத்தான்கள் மற்றும் உயிரிதொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் கண்காட்சி அனைவருக்குமான முயற்சியின் உணர்வைப் புகுத்துவது, புதிய நிறுவனங்களின் மூலம் அரசு, தொழில்துறையின் சிறந்த சிந்தனைகளை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கிறது. இது நாட்டுக்கு கிடைத்த மற்றொரு பெரிய நன்மை. ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் இருந்து நாடு புதிய முன்னேற்றங்களைப் பெறுகிறது, உண்மையான உலகக் கண்ணோட்டத்தில் உதவுகிறது, மேலும் தேவையான கொள்கைச் சூழலையும் தேவையான உள்கட்டமைப்பையும் அரசு வழங்குகிறது” என்று பிரதமர் விரிவாகக் கூறினார்.

“உயிரி தொழில்நுட்பத்துறை மிகுந்த தேவை அதிகரிப்பு துறைகளில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக இந்தியாவில் எளிதாக வாழும் பிரச்சாரங்கள், உயிரி தொழில்நுட்பத்துறைக்கான புதிய வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளன” என்று பிரதமர் மீண்டும் தெரிவித்தார். சுகாதாரம், வேளாண்மை, எரிசக்தி, இயற்கை வேளாண்மை, உயிரி செரிவூட்டப்பட்ட விதைகள், இத்துறைக்கான புதிய வழிகளை உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Ayushman driving big gains in cancer treatment: Lancet

Media Coverage

Ayushman driving big gains in cancer treatment: Lancet
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 23, 2024
December 23, 2024

PM Modi's Rozgar Mela – Youth Appreciate Job Opportunities

Citizens Appreciate PM Modi Vision of Sabka Saath, Sabka Vikas