புதுதில்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் ‘பாரிசு கன்னட திம் திமாவா’கலாச்சார விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, கண்காட்சியைப் பார்வையிட்டார். விடுதலையின் அமிர்தப்பெருவிழாவின் கீழ் நடைபெறும் இந்த விழா கர்நாடகாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடுகிறது.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தில்லி-கர்நாடக சங்கம் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது என்றார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன அமிர்தப் பெருவிழாவை நாடு கொண்டாடும் நேரத்தில், தில்லி கர்நாடக சங்கத்தின் 75வது ஆண்டு விழா நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார். கர்நாடக சங்கத்தின் இந்த 75 ஆண்டு பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
"கர்நாடகத்தின் பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் அடையாளம், பாரம்பரியங்கள் மற்றும் உத்வேகங்களை வரையறுக்க முடியாது" என்று பிரதமர் கூறினார். 'புராண காலத்தில்' அனுமனின் பாத்திரத்திற்கு ஒப்பானதை வரைந்த பிரதமர், இந்தியாவுக்கு கர்நாடகம் இதேபோன்ற பங்கை ஆற்றியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் சகாப்தத்தை மாற்றும் பணி அயோத்தியில் தொடங்கி ராமேஸ்வரத்தில் முடிவடைந்தாலும், அது கர்நாடகாவில் இருந்துதான் அதன் வலிமையைப் பெற்றது என்றும் கூறினார்.
படையெடுப்பாளர்கள் நாட்டை நாசம் செய்து, சோமநாத் போன்ற சிவலிங்கங்களை அழித்த இடைக்காலத்தையும் பிரதமர் குறிப்பிட்டார், தேவர தாசிமையா, மதரா சென்னையா, தோஹரா காக்கையா, பகவான் பசவேஸ்வரா போன்ற துறவிகள்தான் மக்களை தங்கள் நம்பிக்கையுடன் இணைத்தவர்கள். அதேபோல், ராணி அப்பாக்கா, ஒனகே ஓபவ்வா, ராணி சென்னம்மா, கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா போன்ற வீராங்கனைகள் அந்நிய சக்திகளை எதிர்கொண்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு, கர்நாடகத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் இந்தியாவைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர் என்று பிரதமர் கூறினார்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முழக்கத்தின் எடுத்துக்காட்டாக கர்நாடக மக்கள் வாழ்வதற்காக பிரதமர் பாராட்டினார். கவிஞர் குவேம்புவின் ‘நாட கீதே’ பற்றிப் பேசிய அவர், தேசிய உணர்வுகளை வணக்கத்திற்குரிய பாடலில் அழகாக வெளிப்படுத்தினார். “இந்தப் பாடலில், இந்தியாவின் நாகரீகம் சித்தரிக்கப்பட்டு, கர்நாடகாவின் பாத்திரங்களும் முக்கியத்துவமும் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடலின் உணர்வைப் புரிந்து கொள்ளும்போது, ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் மையக்கருவும் நமக்குக் கிடைக்கும்”, என்றார்.
ஜி-20 போன்ற உலகளாவிய அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும் போது, ஜனநாயகத்தின் இலட்சியங்களால் இந்தியா வழிநடத்தப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். லண்டனில் பல மொழிகளில் உள்ள அவரது சபதங்களின் தொகுப்புடன் பஸ்வேஷ்வரா பகவான் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். "கர்நாடகாவின் சித்தாந்தம் மற்றும் அதன் விளைவுகளின் அழியாத தன்மைக்கு இது சான்றாகும்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
“கர்நாடகம் பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பத்தின் பூமி. இது வரலாற்று கலாச்சாரத்தையும் நவீன செயற்கை நுண்ணறிவையும் கொண்டுள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜெர்மன் பிரதமர் திரு ஓலாஃப் ஸ்கோல்ஸை நேற்று சந்தித்ததை நினைவு கூர்ந்த பிரதமர், தமது அடுத்த நிகழ்ச்சி நாளை பெங்களூருவில் நடைபெற உள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பெங்களூருவில் முக்கியமான ஜி20 மாநாடும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். பாரம்பரியமும் தொழில்நுட்பமும் புதிய இந்தியாவின் குணாதிசயங்கள் என்று அவர் கூறினார். நாடு வளர்ச்சி, பாரம்பரியம், முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஒன்றாக முன்னேறி வருகிறது என்றார். ஒருபுறம், இந்தியா தனது பழங்கால கோவில்கள் மற்றும் கலாச்சார மையங்களை புத்துயிர் பெறுகிறது, மறுபுறம், டிஜிட்டல் பணம் செலுத்துவதில் உலக முன்னணியில் உள்ளது என்று அவர் கூறினார். இன்றைய இந்தியா தனது திருடப்பட்ட சிலைகள் மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான கலைப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து திரும்பக் கொண்டுவருகிறது என்று அவர் தெரிவித்தார். "இது புதிய இந்தியாவின் வளர்ச்சிப் பாதையாகும், இது ஒரு வளர்ந்த தேசத்தின் இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்" என்று பிரதமர் கூறினார்.
“இன்று கர்நாடகாவின் வளர்ச்சியே நாட்டிற்கும், கர்நாடக அரசுக்கும் முதன்மையான முன்னுரிமை” என்று பிரதமர் வலியுறுத்தினார். 2009-2014 க்கு இடையில் 11 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கர்நாடகாவுக்கு வழங்கியதாகவும், 2019-2023 முதல் தற்போது வரை 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2009-2014 க்கு இடையில் கர்நாடகா ரயில்வே திட்டங்களில் 4 ஆயிரம் கோடியைப் பெற்றுள்ளது, அதே சமயம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் கர்நாடக ரயில் உள்கட்டமைப்பிற்கு 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அந்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் கோடிகள் கிடைத்துள்ளது, கடந்த 9 ஆண்டுகளில், கர்நாடகா தனது நெடுஞ்சாலைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் கோடி முதலீடு பெற்றது. பத்ரா திட்டத்திற்கான நீண்டகால கோரிக்கையை தற்போதைய அரசு நிறைவேற்றி வருவதாகவும், இந்த வளர்ச்சி அனைத்தும் கர்நாடகாவின் முகத்தை வேகமாக மாற்றி வருவதாகவும் பிரதமர் கூறினார்.
தில்லி கர்நாடக சங்கத்தின் 75 ஆண்டுகள் வளர்ச்சி, சாதனை மற்றும் அறிவின் பல முக்கிய தருணங்களை முன்வைத்துள்ளன என்று பிரதமர் கூறினார். அடுத்த 25 ஆண்டுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், தில்லி கர்நாடக சங்கத்தின் அமிர்த காலத்திலும் அடுத்த 25 ஆண்டுகளிலும் எடுக்கக்கூடிய குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். கன்னட மொழியின் அழகையும் அதன் செழுமையான இலக்கியத்தையும் எடுத்துரைத்த அவர், அறிவு மற்றும் கலையின் மீது மையக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
கலைத் துறையில் கர்நாடகாவின் அசாதாரண சாதனைகளைப் பற்றி எடுத்துரைத்த பிரதமர், கம்சாலே முதல் கர்நாடக இசை பாணி வரையிலும், பரதநாட்டியம் முதல் யக்ஷகன் வரையிலும் கர்நாடகம் பாரம்பரிய மற்றும் பிரபலமான கலைகள் இரண்டிலும் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்தக் கலை வடிவங்களை பிரபலப்படுத்த கர்நாடக சங்கத்தின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இந்த முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
‘சர்வதேச தினை ஆண்டு’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதைத் தொட்டுப் பேசிய பிரதமர், இந்தியத் தானியங்களின் முக்கிய மையமாக கர்நாடகா விளங்குகிறது என்று கூறினார். "ஸ்ரீ அன்ன ராகி கர்நாடகாவின் கலாச்சாரம் மற்றும் சமூக அடையாளத்தின் ஒரு பகுதியாகும்", எடியூரப்பா காலத்தில் இருந்து கர்நாடகாவில் 'ஸ்ரீ தன்யா'வை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட திட்டங்களை பிரதமர் விளக்கினார். ஒட்டுமொத்த நாடும் கன்னடர்களின் வழியைப் பின்பற்றி வருவதாகவும், சிறுதானியங்களை ‘ஸ்ரீ அன்னை’ என்று அழைக்கத் தொடங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். ஸ்ரீ அன்னாவின் பலன்களை முழு உலகமும் அங்கீகரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், வரும் காலங்களில் அதன் கோரிக்கை வலுப்பெறப் போகிறது, இதனால் கர்நாடக விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
2047ல் இந்தியா சுதந்திரமடைந்து வளர்ந்த நாடாக 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியாவின் புகழ்பெற்ற அமிர்த காலத்தில் தில்லி கர்நாடக சங்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும் எனக்கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னணி
பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம் ’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, கர்நாடகாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடும் வகையில் ‘பாரிசு கன்னட திம் திமாவா’ கலாச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ் நடைபெறும் இந்த விழா, நடனம், இசை, நாடகம், கவிதை போன்றவற்றின் மூலம் கர்நாடக கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்த நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும்.
‘दिल्ली कर्नाटका संघ’ के 75 वर्षों का ये उत्सव ऐसे समय में हो रहा है, जब देश भी आज़ादी के 75 वर्ष का अमृत महोत्सव मना रहा है। pic.twitter.com/mb6Sugi574
— PMO India (@PMOIndia) February 25, 2023
भारत की पहचान हो, भारत की परम्पराएँ हों, या भारत की प्रेरणाएं हों, कर्नाटका के बिना हम भारत को परिभाषित नहीं कर सकते। pic.twitter.com/A2blhLOCa2
— PMO India (@PMOIndia) February 25, 2023
आज जब भारत G-20 जैसे बड़े वैश्विक समूह की अध्यक्षता कर रहा है, तो लोकतन्त्र की जननी- Mother of Democracy के रूप में हमारे आदर्श हमारा मार्गदर्शन कर रहे हैं। pic.twitter.com/wfBVGffqBj
— PMO India (@PMOIndia) February 25, 2023
कर्नाटका traditions की धरती भी है, और technology की धरती भी है। pic.twitter.com/SXHh81lfM8
— PMO India (@PMOIndia) February 25, 2023
आज देश विकास और विरासत को, प्रोग्रेस और परम्पराओं को एक साथ लेकर आगे बढ़ रहा है। pic.twitter.com/iLkxnETyPf
— PMO India (@PMOIndia) February 25, 2023
विकास की नई रफ्तार, कर्नाटका की तस्वीर को तेजी से बदल रही है। pic.twitter.com/jEgWFUfAnj
— PMO India (@PMOIndia) February 25, 2023