‘ஆசாதி @ 75-புதிய நகர்ப்புற இந்தியா: நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மத்திய அமைச்சர்கள் திரு ராஜ்நாத் சிங், திரு ஹர்தீப் பூரி, திரு மகேந்திரநாத் பாண்டே, திரு கவுஷல் கிஷோர், உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.01678500_1633424994_684-1-684-1-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.58665500_1633425088_684-2-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.23644800_1633425103_684-3-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
உத்திரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி (பிஎம்ஏஒய்-யு) திட்டத்தின்கீழ் 75,000 பயணாளிகளுக்கு இணையவழி நிகழ்ச்சியில் பிரதமர் சாவிகளை ஒப்படைத்தார். பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் அம்ருத் திட்டத்தின்கீழ் உத்திரப்பிரதேசத்தில் 75 நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார் / அடிக்கல் நாட்டினார்: லக்னோ, கான்பூர், வாரணாசி, ப்ரயாக்ராஜ், கோரக்பூர், ஜான்சி, காஜியாபாத் ஆகிய ஏழு நகரங்களுக்கு ஃபேம் –II திட்டத்தின் கீழ் 75 பேருந்துகளைக் கொடியசைத்து அனுப்பிவைத்தார்: மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு முக்கிய இயக்கங்களின் கீழ் அமலாக்கப்பட்ட 75 திட்டங்களை உள்ளடக்கிய காஃபி மேசை புத்தகத்தை அவர் வெளியிட்டார். லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் இருக்கை அமைப்பது பற்றியும் பிரதமர் அறிவித்தார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.95609000_1633425146_684-4-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
ஆக்ராவைச் சேர்ந்த திருமதி விமலேஷ் என்பவருடன் பிரதமர் கலந்துரையாடிய போது பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திலிருந்தும், சமையல் எரிவாயு, கழிப்பறை, மின்சாரம், குடிநீர் இணைப்பு, ரேஷன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் மூலமும் தாம் பயனடைந்ததாக பிரதமரிடம் அவர் தெரிவித்தார். அரசு திட்டங்களின் ஆதாயங்களைப் பயன்படுத்துமாறு அவரிடம் கேட்டுக்கொண்ட பிரதமர், இது குறித்து அவரது பிள்ளைகளுக்கு குறிப்பாக மகள்களுக்கு எடுத்துரைக்குமாறு கூறினார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.45974000_1633425159_684-5-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
கான்பூரைச் சேர்ந்த ராம் ஜானகி அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், ஸ்வமித்வா திட்டத்திலிருந்து பயன்பெறுகிறாரா என்பது பற்றி அந்தப் பால் வியாபாரியிடம் கேட்டார். 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று வியாபாரத்திற்கு முதலீடு செய்திருப்பதாக அந்த பயனாளி கூறினார். அவரது வியாபாரத்தில் டிஜிட்டல் பரிவர்தனைகளை அதிகரிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.57059400_1633425172_684-6-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
லலித்பூரைச் சேர்ந்த திருமதி பவிதாவுடன் கலந்துரையாடிய பிரதமர், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் அதன் மீதான அவரின் அனுபவம், வாழ்வாதாரம் ஆகியவை பற்றி அந்தப் பயனாளியிடம் விசாரித்தார். ஏழைகளுக்குத் தொழில்நுட்பம் பெருமளவு உதவியிருக்கிறது என்று அவர் கூறினார். ஸ்வமித்வா திட்டத்தின் பயன்களைப் பெறுமாறு பிரதமர் அவரை கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் பிரதமர் பயனாளிகளுடன் மிகவும் தாராளமாகவும் நகைச்சுவையோடும் உரையாடினார். இந்தக் கலந்துரையாடல் மிகச் சாதாரண முறையிலும் தாமாக முன்வந்த நிலையிலும் நடைபெற்றது.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.50163400_1633425187_684-7-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் அனைத்து சொத்துக்களும் வீட்டுக்குத்தேவையான அனைத்தும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கும் சூழ்நிலை பற்றி எடுத்துரைத்த பிரதமர் இதில் சில மாற்றம் தேவை என்றார். இதன் மீது மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கை மூலம் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் அல்லது கணவன்-மனைவி இருவரையும் உரிமையாளர்களாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.97831000_1633425199_684-8-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
அன்னை பாரதிக்கு மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த அடல் பிகாரி வாஜ்பாய் போல தேசிய தொலைநோக்குப் பார்வையை வழங்கும் லக்னோவைப் பிரதமர் பாராட்டினார். “பாபா சாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை அடல் பிகாரி வாஜ்பாய் இருக்கை அமைக்கப்பட்டிருப்பது இன்று எனது நினைவில் நிலைத்துள்ளது” என்று அவர் அறிவித்தார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.18535400_1633425213_684-9-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளதை பிரதமர் வலியுறுத்தினார். நகரங்களில் 1.13 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அவற்றில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கெனவே கட்டப்பட்டு ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வலுவான வீடுகள் இல்லாமல் சேரிகளில் வசித்த 3 கோடி நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள், லட்சாதிபதிகளாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ‘‘பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நாட்டில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் விலையை உங்களால் யூகிக்க முடியும். இந்த மக்கள் லட்சாதிபதிகளாகியுள்ளனர்’’ என திரு நரேந்திர மோடி கூறினார். உத்தரப் பிரதேசத்தில் தற்போதைய ஆட்சிக்கு முந்தைய ஆட்சிகளில் இருந்த அரசுகள், திட்டங்களை அமல்படுத்துவதில் காலம் தாழ்த்தினர். 18,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆனால் அப்போது 18 வீடுகள் கூட கட்டப்படவில்லை என பிரதமர் கூறினார். யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், நகர்ப்புற ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டன மற்றும் 14 லட்சம் வீடுகள் கட்டும் பணி தற்போது பல நிலைகளில் உள்ளன என அவர் தெரிவித்தார். இந்த வீடுகளில் நவீன வசதிகள் உள்ளன.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.73249100_1633425225_684-10-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னைகள் மற்றும் சவால்களை சமாளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் (RERA) முக்கியமான நடவடிக்கை. இந்தச் சட்டம், முழு வீட்டுவசதித் துறையையும் அவநம்பிக்கை மற்றும் மோசடியிலிருந்து வெளியேற உதவியது மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவியது மற்றும் அதிகாரம் அளித்துள்ளது.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.83171900_1633425238_684-11-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1000 கோடி சேமிக்கின்றன. தற்போது, இந்த தொகை, இதர வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எல்இடி விளக்குகள், நகரங்களில் வசிக்கும் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளது.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.54050200_1633425253_684-12-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
தொழில்நுட்பம் காரணமாக, நகர்ப்புறங்களில் கடந்த 6-7 ஆண்டுகளில், மிகப் பெரிய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் கூறினார். நாட்டில் இன்று 70-க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மையங்களின் அடிப்படை தொழில்நுட்பம். ‘‘ இன்று நீங்கள் முதலில் - தொழில்நுட்பம் முதலில்’’ என்று நாம் சொல்ல வேண்டும்’’ என பிரதமர் கூறினார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.40350900_1633425277_684-13-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகள் வங்கிகளுடன் இணைந்துள்ளனர். இந்தத் திட்டம் மூலம், ரூ.2,500 கோடிக்கும் மேற்பட்ட நிதியுதவி, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட உத்தரப் பிரதேச பயனாளிகள் ஸ்வாநிதி திட்டத்தின் பயனை பெற்றுள்ளனர். டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கு, வியாபாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.98773300_1633425323_684-15-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்திய மெட்ரோ சர்வீஸ் வேகமாக விரிவடைந்து வருவதாக பிரதமர் இன்று கூறினார். 2014ம் ஆண்டில், 250 கி.மீ தூரத்துக்கு குறைவான வழித்தடங்களில் மெட்ரோ சேவைகள் பயன்படுத்தப்பட்டன. இன்று 750 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. தற்போது 1000 கி.மீக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.70957600_1633425351_684-16-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.88140200_1633425364_684-17-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.66980700_1633425380_684-18-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.72362500_1633425394_684-19-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.62593500_1633425406_684-20-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.50228100_1633425427_684-21-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.47662600_1633425447_684-22-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.92983300_1633425459_684-23-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
![](https://cdn.narendramodi.in/cmsuploads/0.83068300_1633425477_684-24-prime-minister-narendra-modi-inaugurates-azadi-conference-and-expo-in-lucknow.jpg)
मुझे इस बात की भी खुशी होती है कि देश में पीएम आवास योजना के तहत जो घर दिए जा रहे हैं, उनमें 80 प्रतिशत से ज्यादा घरों पर मालिकाना हक महिलाओं का है या फिर वो ज्वाइंट ओनर हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 5, 2021
लखनऊ ने अटल जी के रूप में एक विजनरी, मां भारती के लिए समर्पित राष्ट्रनायक देश को दिया है।
— PMO India (@PMOIndia) October 5, 2021
आज उनकी स्मृति में, बाबा साहब भीमराव आंबेडकर यूनिवर्सिटी में अटल बिहारी वाजपेयी चेयर स्थापित की जा रही है: PM @narendramodi
2014 के बाद से हमारी सरकार ने पीएम आवास योजना के तहत शहरों में 1 करोड़ 13 लाख से ज्यादा घरों के निर्माण की मंजूरी दी है।
— PMO India (@PMOIndia) October 5, 2021
इसमें से 50 लाख से ज्यादा घर बनाकर, उन्हें गरीबों को सौंपा भी जा चुका है: PM @narendramodi
मेरे जो साथी, झुग्गी-झोपड़ी में जिंदगी जीते थे, उनकी पास पक्की छत नहीं थी, ऐसे तीन करोड़ परिवारों को लखपति बनने का अवसर मिला है।
— PMO India (@PMOIndia) October 5, 2021
प्रधानमंत्री आवास योजना के तहत देश में जो करीब-करीब 3 करोड़ घर बने हैं, आप उनकी कीमत का अंदाजा लगाइए।
ये लोग लखपति बने हैं: PM @narendramodi
हमारे यहां कुछ महानुभाव कहते हैं कि मोदी ने क्या किया?
— PMO India (@PMOIndia) October 5, 2021
आज पहली बार मैं ऐसी बात बताना चाहता हूं जिसके बाद बड़े-बड़े विरोधी, जो दिन रात हमारा विरोध करने में ही अपनी ऊर्जा खपाते हैं, वो मेरा ये भाषण सुनने के बाद टूट पड़ेंगे: PM @narendramodi
शहरी मिडिल क्लास की परेशानियों और चुनौतियों को भी दूर करने का हमारी सरकार ने बहुत गंभीर प्रयास किया है।
— PMO India (@PMOIndia) October 5, 2021
Real Estate Regulatory Authority यानि रेरा कानून ऐसा एक बड़ा कदम रहा है।
इस कानून ने पूरे हाउसिंग सेक्टर को अविश्वास और धोखाधड़ी से बाहर निकालने में बहुत बड़ी मदद की है: PM
LED स्ट्रीट लाइट लगने से शहरी निकायों के भी हर साल करीब 1 हज़ार करोड़ रुपए बच रहे हैं।
— PMO India (@PMOIndia) October 5, 2021
अब ये राशि विकास के दूसरे कार्यों में उपयोग में लाई जा रही है।
LED ने शहर में रहने वाले लोगों का बिजली बिल भी बहुत कम किया है: PM @narendramodi
भारत में पिछले 6-7 वर्षों में शहरी क्षेत्र में बहुत बड़ा परिवर्तन टेक्नोलॉजी से आया है।
— PMO India (@PMOIndia) October 5, 2021
देश के 70 से ज्यादा शहरों में आज जो इंटीग्रेटेड कमांड एंड कंट्रोल सेंटर चल रहे हैं, उसका आधार टेक्नोलॉजी ही है: PM @narendramodi
पीएम स्वनिधि योजना के तहत रेहड़ी-पटरी वालों को, स्ट्रीट वेंडर्स को बैंकों से जोड़ा जा रहा है।
— PMO India (@PMOIndia) October 5, 2021
इस योजना के माध्यम से 25 लाख से ज्यादा साथियों को 2500 करोड़ रुपए से अधिक की मदद दी गई है।
इसमें भी यूपी के 7 लाख से ज्यादा साथियों ने स्वनिधि योजना का लाभ लिया है: PM @narendramodi
आज भारत मेट्रो सेवा का देश भर के बड़े शहरों में तेजी से विस्तार कर रहा है।
— PMO India (@PMOIndia) October 5, 2021
2014 में जहां 250 किलोमीटर से कम रूट पर मेट्रो चलती थी, वहीं आज लगभग 750 किलोमीटर में मेट्रो दौड़ रही है।
देश में आज एक हज़ार किलोमीटर से अधिक मेट्रो ट्रैक पर काम चल रहा है: PM @narendramodi