இந்தியாவின் பழம் பெருமை மறுமலர்ச்சி பெற வெல்லமுடியாத மனஉறுதியை வெளிப்படுத்திய சர்தார் பட்டேலை பிரதமர் வணங்கினார்
விஸ்வநாத் முதல் சோம்நாத் வரை பல கோயில்களை புதுப்பித்த லோகமாதா அகில்யபாய் ஹோல்கரை நினைவுகூர்ந்தார்
மத சுற்றுலாவுக்கு புதிய வாய்ப்புகளை பார்ப்பது மற்றும் புனித பயணங்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது போன்றவை எல்லா காலத்திலும் கோரிக்கையாக இருந்துள்ளது
பயங்கரவாத துணையோடு பேரரசுகளை அமைக்கலாம் என்று நினைக்கும் அழிவுகரமான சக்திகள், சில காலம் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் அவை எப்போதும் நிரந்தரமானது அல்ல, அவர்களால் நீண்ட காலத்திற்கு மனிதகுலத்தை அடக்கி ஆள முடியாது. சோம்நாத் கோயிலை, தாக்குதல்காரர்கள் சிலர் அழித்தது உண்மை. இது போன்ற கொள்கைகளை கண்டு உலகம் பயப்படும்போது, இது இன்றும் கூட உண்மையாக இருக்கிறது : பிரதமர்
சிக்கலான பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வுகளை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. நவீன இந்தியாவின் பெருமைக்கான பிரகாசமான தூண், ராமர் கோவில் வடிவில் வந்து கொண்டிருக்கிறது: பிரதமர்
நமக்கு வரலாறு மற்றும் உண்மையின் சாரம்சம் அனைவருடனும், அனைவரின் முன்னேற்றம், அனைவரின் நம்பிக்கை, மற்றும் அனைவரின் முயற்சிதான் : பிரதமர்
நான்கு புனித யாத்திரைக்கான ஏற்பாடு, நமது சக்தி பீடங்களின் கருத்து, நமது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு புனிதயாத்திரைகளை அமைப்பது, நமது நம்பிக்கையின் இந்த வெளிப்பாடு, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை காட்டுகிறது: பிரதமர்
நவீன உள்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் பழங்கால பெருமையை நாடு புதுப்பிக்கிறது : பிரதமர்

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.  சோம் நாத் பவனி, சோம்நாத் கண்காட்சி கூடம், மீண்டும் கட்டப்பட்ட ஜூனா சோம்நாத் கோயில் ஆகியவை உட்பட பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ பார்வதி கோயிலுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார்.  இந்நிகழ்ச்சியில் திரு லால் கிருஷ்ணா அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இந்தியாவின் பழம் பெருமையின் மறுமலர்ச்சிக்காக, வெல்ல முடியாத மனஉறுதியை காட்டிய சர்தார் பட்டேலுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்.  சோம்நாத் கோயிலை, சுதந்திர இந்தியாவின் சுதந்திர உணர்வுடன் சர்தார் பட்டேல் தொடர்பு படுத்தினார்.  சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில், சர்தார் பட்டேலின் முயற்சிகளை நாம் முன்னெடுத்துச் செல்வதும், சோம்நாத் கோயிலுக்கு புதிய சிறப்பை சேர்ப்பதும் நமது அதிர்ஷ்டம் என திரு நரேந்திர மோடி கூறினார்.  விஸ்வநாத் முதல் சோம்நாத் வரை பல கோயில்களை புதுப்பித்த லோக்மாதா அகில்யாபாய் ஹோல்கரையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  அவரது வாழ்வின் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையில் இருந்து உத்வேகம் பெற்று நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என பிரதமர் கூறினார்.

ஒற்றுமை சிலை மற்றும் கட்ச்  பகுதியின் மாற்றம் போன்ற முயற்சிகளால், சுற்றுலாவுடன் நவீனத்துவத்தின் இணைப்பின் முடிவுகளை, குஜராத் மிக அருகாமையி்ல் கண்டுள்ளது.  மத சுற்றுலாவுக்கு புதிய வாய்ப்புகளை பார்ப்பது மற்றும் புனித பயணங்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை  வலுப்படுத்துவது போன்றவை எல்லா காலத்திலும் கோரிக்கையாக இருந்துள்ளது என பிரதமர் சுட்டிக் காட்டினார்.

அழித்தல் மற்றும் அழிவுக்கு மத்தியில் சிவன் வளர்ச்சி மற்றும் படைப்பாற்றலை உருவாக்குகிறார் என பிரதமர் கூறினார்.  சிவன் முடிவில்லாதவர், விவரிக்க முடியாதவர் மற்றும் என்றும் நிலையானவர். சிவன் மீது நமக்குள்ள நம்பிக்கை, கால வரம்புகளுக்கு அப்பால் நம் இருப்பை நமக்கு உணர்த்துகிறது, காலங்களின் சவால்களை சந்திக்கும் வலிமையை நமக்கு அளிக்கிறது என பிரதமர் கூறினார். 

மிதிப்பு மிக்க கோயிலின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், கோயில் தொடர்ந்து அழிக்கப்பட்டதையும் மற்றும் ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்பும் எழுச்சி பெற்றதையும் பிரதமர் நினைவுக்கூர்ந்தார்.  உண்மையை பொய்யால் அழிக்க முடியாது மற்றும் நம்பிக்கையை பயங்கரவாதத்தால் அழிக்க முடியாது என்ற நம்பிக்கையின் அடையாளமாக இது உள்ளது. பயங்கரவாத துணையோடு பேரரசுகளை அமைக்கலாம் என்று நினைக்கும் அழிவுகரமான சக்திகள், சில காலம் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் அவை எப்போதும் நிரந்தரமானது அல்ல, அவர்களால் நீண்ட காலத்திற்கு மனிதகுலத்தை அடக்கி ஆள முடியாது. சோம்நாத் கோயிலை, தாக்குதல்காரர்கள் சிலர் அழித்தது உண்மை. இது போன்ற கொள்கைகளை கண்டு உலகம் பயப்படும்போது, இது இன்றும் கூட உண்மையாக இருக்கிறது என பிரதமர் வலியுறுத்தி கூறினார். 

பல நூற்றாண்டு மன உறுதி மற்றும் கொள்கைகளின் தொடர்ச்சி காரணமாக, சோம்நாத் கோயில் மீண்டும் கட்டப்பட்டு பிரம்மாண்டமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் கூறினார்.  சுதந்திரத்துக்குப்பின்பும், இந்த பிரச்சாரத்துக்காக, ராஜேந்திர பிரசாத், சர்தார் பட்டேல் மற்றும் கே.எம் முன்ஷி போன்ற சிறந்த தலைவர்கள் சிக்கல்களை சந்தித்தனர்.  இன்னும், இறுதியாக சோம்நாத்கோயில் , 1950ம் ஆண்டில் நவீன இந்தியாவின் தெய்வீக தூணாக நிறுவப்பட்டுள்ளது.   சிக்கலான பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வுகளை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.  நவீன இந்தியாவின் பெருமைக்கான பிரகாசமான தூண், ராமர் கோவில் வடிவில் வந்து கொண்டிருக்கிறது என அவர் கூறினார். 

 நமது நிகழ்காலத்தை மேம்படுத்தவும், புதிய எதிர்காலத்தை உருவாக்கவும்  நமது சிந்தனை,  வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.  தனது, இந்திய ஜோடா இயக்கம் மந்திரம் பற்றி குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இது புவியியல் இணைப்பு மட்டும் அல்ல, சிந்தனைகளையும் இணைக்கிறது என்றார்.  இது எதிர்கால இந்தியாவின் உருவாக்கத்தில்,  நமது கடந்த காலத்துடன் இணைப்பதற்கான உறுதிமொழியாகும் என பிரதமர் கூறினார்.  நமக்கு வரலாறு மற்றும் உண்மையின் சாரம்சம் அனைவருடனும், அனைவரின் முன்னேற்றம், அனைவரின் நம்பிக்கை, மற்றும் அனைவரின் முயற்சி என பிரதமர் கூறினார்.

இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்துவதில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கை அமைப்பின் பங்கை பிரதமர் எடுத்துரைத்தார்.  மேற்கிலுள்ள சோம்நாத் மற்றும் நாகேஸ்வரம் முதல் கிழக்கிலுள்ள வைத்யநாத் கோயில், வடக்கில் உள்ள பாபா கேதார்நாத் முதல் தெற்கிலுள்ள ராமேஸ்வரம் வரையில் உள்ள இந்த 12 ஜோதிர் லிங்கங்கள் ஒட்டுமொத்த இந்தியாவை இணைக்கின்றன என பிரதமர் கூறினார்.

அதேபோல், நான்கு புனித யாத்திரைக்கான ஏற்பாடு,  நமது சக்தி பீடங்களின் கருத்து, நமது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு புனிதயாத்திரைகளை அமைப்பது, நமது நம்பிக்கையின் இந்த வெளிப்பாடு, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை காட்டுகிறது என பிரதமர் கூறினார்.

 நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில், ஆன்மீகத்தின் பங்களிப்பை தொடர்ந்த பிரதமர், சுற்றுலா மற்றும் ஆன்மீக சுற்றுலாவில்  தேசிய மற்றும் சர்வதேச திறன்கள் பற்றி பேசினார்.  நவீன கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், பழம் பெருமையை நாடு புதுப்பிக்கிறது என அவர் கூறினார். ராமாயண சுற்றுக்கு அவர் உதாரணம் அளித்தார்.  இந்த ராமாயண சுற்று, ராமர் பக்தர்களுக்கு,  ராமர் தொடர்பான புதிய இடங்களைப் பற்றி விளக்குகிறது மற்றும் ராமர் எப்படி ஒட்டுமொத்த இந்தியாவின் ராமர் என்பதை உணர வைத்தார். அதேபோல்  புத்தர் சுற்று, உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கான வசதிகளை வழங்குகிறது. சுதேஸ் தர்ஷன் திட்டத்தின் கீழ், 15 கருப்பொருளில் சுற்றுலா சுற்றுகளை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் உருவாக்குகிறது என்றும், இது புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்குகிறது எனவும் பிரதமர்  கூறினார். 

கேதர்நாத் போன்ற மலைப் பகுதிகளில், நான்கு புனிதயாத்திரைகளுக்கான சுரங்கப் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், வைஷ்ணவ் தேவி கோயிலில் வளர்ச்சிப் பணி, வடகிழக்கு பகுதிகளில் அதி நவீன உள்கட்டமைப்பு  ஆகியவை தூரங்களை குறைக்கிறது.  அதேபோல், 2014ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரசாத் திட்டத்தின் கீழ், 40 முக்கிய புனிதயாத்திரை தலங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் 15 இடங்கள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டன.  குஜராத்தில் 3 திட்டங்களில் ரூ. 100 கோடிக்கு மேல் பணிகள் நடக்கின்றன.  புனிதயாத்திரை தலங்களை இணைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தப்படுகிறது.  சுற்றுலா மூலம் பொது மக்களை மட்டும் நாடு இணைக்கவில்லை, முன்னோக்கியும் செல்கிறது.  பயணம் மற்றும் சுற்றுலா போட்டித்திறன் பட்டியலில்  நாடு கடந்த 2013ம் ஆண்டில் 65வது இடத்தில் இருந்தது. 2019ம் ஆண்டில் 34வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.  

பிரசாத் திட்டத்தின்  (PRASHAD (Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive) -புனித யாத்திரை புத்துணர்ச்சி மற்றும் ஆன்மீகம், பாரம்பரியத்தை அதிகரிக்கும் நடவடிக்கை) கீழ் சோம்நாத் பவனி ரூ.47 கோடிக்கு மேற்பட்ட செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வசதி மைய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சோம்நாத் கண்காட்சி மையம்,  பழைய சோம்நாத் கோயிலின் சிதைந்த பாகங்களை காட்டுகிறது மற்றும் அதன் சிற்பங்களில், பழைய சோம்நாத் கட்டிடக்கலையின் நாகர் பாணி தெரிகிறது. 

பழைய சோம்நாத் (ஜூனா) கோயிலை மீண்டும் கட்டும் பணியை, ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை ரூ.3.5 கோடி செலவில் நிறைவேற்றியுள்ளது.  பழைய கோயிலை சிதைந்த நிலையில் கண்ட இந்தூர் ராணி அகிலாபாய், இந்த கோயிலை  கட்டியதால், இந்த கோயில் அகிலாபாய் கோயில் எனவும் குறிப்பிடப்படுகிறது. யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி, ஒட்டுமொத்த பழைய கோயில் வளாகமும், வலிமையுடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ பார்வதி கோயில், ரூ.30 கோடி செலவில் கட்டப்படவுள்ளது.  சோமபரா சலத்ஸ் பாணியில் இந்த கோயிலை கட்டுவது  மற்றும் கர்பகிரஹமும், நிர்த்ய மண்டபம் அமைப்பதும் இதில் அடங்கும். 

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world

Media Coverage

PM Modi hails diaspora in Kuwait, says India has potential to become skill capital of world
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 21, 2024
December 21, 2024

Inclusive Progress: Bridging Development, Infrastructure, and Opportunity under the leadership of PM Modi