Quoteநினைவு தபால் தலையையும் வெளியிட்டார்
Quote"புதிய இந்தியாவின் திறன்களுக்கு பெங்களூரு சான்றாக திகழ்கிறது. இந்தப் புதிய உயரம்தான் புதிய இந்தியாவின் உண்மை நிலை” ;
Quote"கர்நாடக இளைஞர்கள் தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பாதுகாப்பு துறையில் பயன்படுத்த வேண்டும்"
Quote"புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் நாடு முன்னேறும் போது, அதன் அமைப்புகளும் புதிய சிந்தனைக்கு ஏற்ப மாறத் தொடங்கும்"
Quote"இன்று, ஏரோ இந்தியா ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பாதுகாப்புத் துறையின் நோக்கத்தை வெளிப்படுத்துவதுடன், இந்தியாவின் தன்னம்பிக்கையையும் பறைசாற்றுகிறது "
Quote"21 ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் இழக்காது, முயற்சியில் தொய்வும் காட்டாது "
Quote"பாதுகாப்பு உற்பத்தியில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா விரைவாக முன்னேறும், அதில் நமது தனியார் துறை மற்றும் முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்"
Quote"இன்றைய இந்தியா வேகமாகவும், வெகு தொலைவுக்கும் சிந்திக்கிறது, விரைவான முடிவுகளை எடுக்கிறது"
Quote"ஏரோ இந்தியாவின் கர்ஜனை இந்தியாவின் சீர்திருத்தம்,

14-வது ஏரோ இந்தியா 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். ஏரோ இந்தியா 2023 இன் கருப்பொருள் “ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை” என்பதாகும். 80-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. மேலும் 800 பாதுகாப்பு நிறுவனங்கள், சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட. ‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள்/தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.

|

 நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புதிய இந்தியாவின் திறன்களுக்கு பெங்களூரு சாட்சியாக உள்ளது என்றார். "இந்த புதிய உயரம்தான் புதிய இந்தியாவின் உண்மை நிலையாக உள்ளது. இன்று இந்தியா புதிய உயரங்களைத் தொட்டு, அவற்றையும் தாண்டி வருகிறது" என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களுக்கு ஏரோ இந்தியா 2023 ஒரு சிறந்த உதாரணம் என்றும், இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்வது முழு உலகமும் இந்தியாவின் மீது காட்டும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் பிரதமர் கூறினார். உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இந்திய எம்எஸ்எம்இக்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஏரோ இந்தியா 2023 இன் கருப்பொருள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 'ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை', தற்சார்பு இந்தியாவின் வலிமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே செல்கிறது என்று தெரிவித்தார்.

|

இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு மற்றும்  நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் வட்டமேசை அமர்வு குறித்து  கருத்து தெரிவித்த பிரதமர், இந்தத் துறையின் துடிப்பான பங்கேற்புகள் இந்தியாவின் விமானத்துறை திறன்களை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

|

இந்தியத் தொழில்நுட்ப மேம்பாட்டின் மையமாகத் திகழும் கர்நாடகாவில், ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். இது விமானத்துறையில் கர்நாடக இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கும் என்று அவர் கூறினார். நாட்டை வலுப்படுத்தும் நோக்கில், தங்களது தொழில் நுட்பத் திறன்களைப்  பாதுகாப்புத் துறையில்  ஈடுபடுத்த வேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

 மாறி வரும் புதிய இந்தியாவின் அணுகுமுறையை பிரிதிப்பலிக்கின்ற ஏரோ இந்தியா 2023 பற்றி சிறப்பாக எடுத்துரைத்தப் பிரதமர்,“புதிய சிந்தனையோடும், புதிய அணுகுமுறையோடும் நாடு  முன்னேறும் போது, அதன் நடைமுறைகளும் அதற்கேற்ப புதிய சிந்தனைக்கான மாற்றத்தைத் தொடங்கவேண்டும்“ என்றார். ஏரோ இந்தியா முன்பு வெறும் காட்சியாகவும், இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான வழியாகவும் மட்டும் இருந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், இப்போது அந்தக் கண்ணோட்டம் மாறியிருக்கிறது என்றார்.

|

 தனது திறன்களை வெளிக்கொண்டு வருவதில், இந்தியா வெற்றிபெற்றிருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். சூரத்திலும் துமாக்கூருவிலும் உள்ள தேஜஸ், ஐஎன்எஸ் விக்ரந்த் மற்றும் நவீன உற்பத்தி வசதிகள் பற்றி எடுத்துரைத்த பிரதமர், இவை  தற்சார்பு இந்தியாவின் ஆற்றலாகவும், உலகின் புதிய மாற்று மற்றும் வாய்ப்புகளோடு இணைந்ததாகவும் இருக்கின்றன என்றார்.

 சீர்திருத்தங்களின் உதவியுடன் அனைத்து துறைகளிலும் கொண்டுவரப்பட்டுள்ள புரட்சி பற்றி எடுத்துரைத்த அவர், “21ம் நூற்றாண்டின் புதிய இந்தியா எந்த வாய்ப்பையும் தவறவிட்டதும் இல்லை, முயற்சியில் பின்தங்கியதும் இல்லை” என்றார். பல தசாப்தங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்வதாக இருந்த நாடு இன்று உலகின் 75 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது என்பதை அவர் கோடிட்டு காட்டினார்.

|

  கடந்த 8-9 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், 2024-25க்குள் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதிகளை 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதை 5 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்றார்.  இதில் நமது தனியார் துறை மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார். இந்தியாவிலும், வெளிநாடுகள் பலவற்றிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யுமாறு தனியார் துறையினருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

|

“இன்றைய இந்தியா வேகமாக சிந்திக்கிறது, தொலைநோக்குப் பார்வையுடன் விரைவான முடிவுகளை எடுக்கிறது”, என்று அமிர்த காலத்தில் இந்தியாவின் செயல்பாடுடன் போர் விமானியை ஒப்பிட்டு திரு மோடி கூறினார். தயக்கம் ஏதும் இல்லாமல், புதிய உச்சத்தைத் தொடுவதற்கு மிகவும் ஆவலோடு இருக்கும் நாடு, இந்தியா என்றார் அவர். எத்தனை உயரத்தில், எவ்வளவு வேகத்தில் பறந்தாலும் இந்தியா வேரூன்றியிருப்பதை அவர் வலியுறுத்தினார்.

“சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகிய இந்தியாவின் செய்தியை ஏரோ இந்தியா எதிரொலிக்கிறது”, என்று பிரதமர் குறிப்பிட்டார். எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களை ஒட்டுமொத்த உலகமும் எதிர்நோக்குகிறது என்று கூறிய அவர், இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச முதலீடுகளுக்கு உகந்த சூழலியலை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணற்ற நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார். பாதுகாப்பு மற்றும் இதர துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை சுட்டிக் காட்டிய பிரதமர், தொழில்துறைகளுக்கான உரிமங்களை வழங்குவதற்கான நடைமுறையை எளிதாக்கிய அதே வேளையில், அவற்றின் கால அளவை நீட்டித்தது குறித்தும் கூறினார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உற்பத்தி ஆலைகளுக்கான வரி சலுகைகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

|

தேவை, நிபுணத்துவம் மற்றும் அனுபவம் ஏற்படும் இடங்களில் எல்லாம் தொழில் வளர்ச்சி என்பது இயற்கையானது என்று பிரதமர் குறிப்பிட்டார். துறையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேலும் ஆற்றல் பெறும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அவர் உறுதியளித்தார்.

கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜநாத் சிங், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

பின்னணி:

‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள்/தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும். இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவது குறித்த பிரதமரின் முக்கியத்துவமும் இதில் முன்னிறுத்தப்படும்.  இந்நிகழ்ச்சியில் நாட்டின் வடிவமைப்புத் தலைமைத்துவம், யு.ஏ.வி. (ஆளில்லாத விமானம்) துறையில் வளர்ச்சி, பாதுகாப்பு விண்வெளி மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் நாட்டின் முன்னேற்றத்தை வெளிக்கொணரும் விதமாக அமையும். மேலும், இந்நிகழ்வு, இலகுரக போர் விமானம் (எல்.சி.ஏ)-தேஜாஸ், ஹெச்.டி.டி-40, டோர்னியர் இலகு ரக ஹெலிகாப்டர் (எல்.யு.ஹெச்), எதிர் தாக்குதலில் ஈடுபடும் இலகு ரக ஹெலிகாப்டர் (எல்.சி.ஹெச்) மற்றும் சிறப்பு வாய்ந்த இலகு ரக ஹெலிகாப்டர் (ஏ.எல்.ஹெச்) போன்ற உள்நாட்டு விமான தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்படும். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், மேம்பாட்டுடன் கூடிய உற்பத்திக்காக இணைந்து செயல்படுவது தொடர்பான நடவடிக்கைகள் உட்பட வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த நிகழ்வு உதவும்.

|

ஏரோ இந்தியா 2023-இல் 80க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும். ஏரோ இந்தியா 2023-இல் சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய அசல் இயந்திர உற்பத்தித் துறையின் 65 தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும். கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்களில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் அடங்கும்.  இது நாட்டின் முக்கிய தொழில்நுட்பங்களின் முன்னேற்றம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு திறன்களின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமையும். ஏரோ இந்தியா 2023-இல் ஏர்பஸ், போயிங், டசால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், ஆர்மி ஏவியேஷன், ஹெச்.சி ரோபோடிக்ஸ், எஸ்.ஏ.ஏ.பி., சஃப்ரான், ரோல்ஸ் ராய்ஸ், லார்சன் & டூப்ரோ, பாரத் ஃபோர்ஜ் லிமிடெட், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி.டி.எல்) மற்றும் பி.‌இ‌.எம்‌.எல்  லிமிடெட் போன்ற நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Govt disburses ₹1,596 cr in six PLI schemes during Apr-Sep this fiscal

Media Coverage

Govt disburses ₹1,596 cr in six PLI schemes during Apr-Sep this fiscal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister marks 10 years of Beti Bachao, Beti Padao movement
January 22, 2025
QuoteBeti Bachao, Beti Padao has been instrumental in overcoming gender biases: PM
QuoteDistricts with historically low child sex ratios have reported significant improvements: PM

Marking 10 years of the Beti Bachao, Beti Padao movement today, the Prime Minister Shri Narendra Modi remarked that it had become a transformative, people powered initiative and drawn participation from people across all walks of life. He highlighted that Beti Bachao, Beti Padao was instrumental in overcoming gender biases and empowering girl children. Shri Modi further noted that districts with historically low child sex ratios have reported significant improvements and complimented all stakeholders who have made this movement vibrant at the grassroots level.

In a thread post on X, he wrote:

“Today we mark 10 years of the #BetiBachaoBetiPadhao movement. Over the past decade, it has become a transformative, people powered initiative and has drawn participation from people across all walks of life.”

“#BetiBachaoBetiPadhao has been instrumental in overcoming gender biases and at the same time it has created the right environment to ensure that the girl child has access to education and opportunities to achieve her dreams.”

“Thanks to the dedicated efforts of the people and various community service organisations, #BetiBachaoBetiPadhao has achieved remarkable milestones. Districts with historically low child sex ratios have reported significant improvements and awareness campaigns have instilled a deeper sense of the importance of gender equality.”

“I compliment all stakeholders who have made this movement vibrant at the grassroots level. Let us continue to protect the rights of our daughters, ensure their education and create a society where they can thrive without any discrimination. Together, we can ensure that the coming years bring even greater progress and opportunity for India’s daughters. #BetiBachaoBetiPadhao”