“இந்த ஆண்டின் முதலாவது மாதம், முதலாவது வாரத்தில் இந்தியா அதன் தடுப்பூசி இயக்கத்தில் 150 கோடி- 1.5 பில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளது ”
“ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் 150 கோடி டோஸ்கள் என்பது குறிப்பிடத்தக்க சாதனை மற்றும் நாட்டின் புதிய மனவுறுதிக்கான அடையாளம் ”
“கட்டுப்படியான மற்றும் அனைவரையும் உட்படுத்திய சுகாதார கவனிப்பில் ஆயுஷ் மான் பாரத் திட்டம் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளது”
“பிரதமரின் மக்கள் மருந்துவ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 2 கோடியே 60 லட்சம் நோயாளிகள் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுள்ளனர் ”

கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டாக்டர் சுபாஷ் சர்க்கார், திரு சந்தானு தாக்கூர், திரு ஜான் பிர்லா, திரு நிதிஷ் பிரமாணிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், மேற்குவங்க மக்கள் குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள், கட்டுப்படியான மற்றும் நவீன சிகிச்சையை இந்த புதிய வளாகம் வழங்கும் என்றார். “நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மிகச் சிறந்த மருத்துவ வசதியைக் கிடைக்கச் செய்வது என்ற உறுதிமொழியின் பயணத்தில் நாங்கள் மற்றொரு வலுவான அடியை எடுத்து வைத்திருக்கிறோம்” என்று பிரதமர் கூறினார்.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு தடுப்பூசி  செலுத்துவதுடன் இந்த ஆண்டினை நாடு தொடங்கியிருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். அதே சமயம், இந்த ஆண்டின் முதலாவது மாதம், முதலாவது வாரத்தில் 150 கோடி- 1.5 பில்லியன் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை இந்தியா படைத்துள்ளது. ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் 150 கோடி டோஸ்கள் என்பது குறிப்பிடத்தக்க சாதனை மற்றும் நாட்டின் புதிய மனவுறுதிக்கான அடையாளமாகும். நாட்டின் புதிய நம்பிக்கை, தற்சார்பு இந்தியா, பெருமிதம் ஆகியவற்றையும் இது குறிப்பதாக  அவர் கூறினார். உருமாறிய ஒமிக்ரான் காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் கேடயமாக இருப்பது மிகவும் முக்கியமானது என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவில் தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்த மக்கள் தொகையில், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பதாக பிரதமர் இன்று குறிப்பிட்டார். 5 நாட்களுக்குள் 1.5 கோடிக்கும் அதிகமான சிறார்களும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.  இந்த சாதனையை ஒட்டுமொத்த தேசத்திற்கும் அனைத்து அரசுக்கும் அவர் அர்ப்பணித்தார்.  இந்த சாதனைக்கு நாட்டின் விஞ்ஞானிகளுக்கும் தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கும், சுகாதாரத்துறையில் உள்ளவர்களுக்கும் அவர் சிறப்பான நன்றியைத் தெரிவித்தார்.

மத்திய அரசால் மேற்கு வங்கத்திற்கு இதுவரை கட்டணமில்லாமல் 11 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டிருப்பதாகப்  பிரதமர் கூறினார். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான சுவாசக் கருவிகளும், 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய ஆக்சிஜன் சிலிண்டர்களும் வங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் 49 புதிய பிஎஸ்ஏ ஆக்சிஜன் தொழிற்கூடங்களும், தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் சுகாதாரத்துறையில் மாற்றம் கொண்டுவர முன்கூட்டியே நோய் தடுக்கும் சுகாதாரக் கவனிப்பு, குறைந்த செலவில் சுகாதார கவனிப்பு, விநியோக முறையில் தலையீடு ஆகியவை இயக்கங்களாக விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.  முன்கூட்டியே நோய் தடுக்கும் சுகாதார கவனிப்பை  யோகா, ஆயுர்வேதம், உடல் தகுதி இயக்கம், அனைவருக்கும் தடுப்பூசி ஆகியவை வலுப்படுத்தும்.  அதே போல், தூய்மை இந்தியா இயக்கம், வீட்டுக்கு வீடு தண்ணீர் திட்டங்கள், சிறந்த சுகாதாரப் பயன்களுக்குப் பங்களிப்பு செய்கின்றன.

பொருளாதார தாக்கங்கள் காரணமாக ஏழைகளுக்கும் நடுத்தர வகுப்பினருக்கும் புற்றுநோய்  ஏற்படுகிறது என்ற அச்சம் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். இந்த நோய் ஏற்படும் ஏழைகளை அந்த விஷச் சூழலிலிருந்து வெளியேவர செலவு குறைந்த, எளிதில் கிடைக்கக் கூடிய சிகிச்சைக்கு, நாடு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.  8 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் மிகவும் குறைந்த விலையில் மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. இந்த மையங்களில் மிகவும் குறைந்த செலவில் 50க்கும் அதிகமான புற்றுநோய் மருந்துகள் கிடைக்கின்றன.

நோயாளிகளின் தேவைகளை உணர்ந்துள்ள அரசு 500க்கும் அதிகமான மருந்துகளின் விலையை முறைப்படுத்தியதால் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கும் மேல் சேமிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் கூறினார். இருதய நோயாளிகளுக்கான ரத்தநாள செயற்கை இணைப்புக் குழாய்களின் (ஸ்டென்ட்) விலை முறைப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும், 4,500 கோடி ரூபாய்க்கும் மேல் சேமிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு முழங்கால் மூட்டு, மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு குறைக்கப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் 1,500 கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது. பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் 12 லட்சம் ஏழை நோயாளிகள் கட்டணமின்றி  டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர் என்று பிரதமர் தெரிவித்தார்.

கட்டுப்படியான மற்றும் அனைவரையும் உட்படுத்திய சுகாதார கவனிப்பில் ஆயுஷ் மான் பாரத் திட்டம் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளது. பிரதமரின் மக்கள் மருந்துவ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 2 கோடியே 60 லட்சம் நோயாளிகள் கட்டணமின்றி சிகிச்சை பெற்றுள்ளனர்.  இந்தத் திட்டம் இல்லாமல் போயிருந்தால் 50 முதல் 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை நோயாளிகள் செலவு செய்திருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 17 லட்சத்திற்கும் அதிகமான புற்றுநோயாளிகள்  பயனடைந்துள்ளனர். புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ச்சியாக பரிசோதனை செய்வதன் மூலம் கடுமையான நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதையும் இந்தத் திட்டம் மேம்படுத்துகிறது.  இந்த இயக்கத்தில் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் உதவி செய்து வருகின்றன. 5 ஆயிரத்திற்கும் அதிகமாக இத்தகைய மையங்கள் மேற்குவங்கத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் 15 கோடிக்கும் அதிகமானோர் வாய், கருப்பை,  மார்பக புற்றுநோய்க்காக பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.

2014-ஆம் ஆண்டு வரை  நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 90,000 அளவுக்குள் இருந்தன என்று பிரதமர் கூறினார். கடந்த 7 ஆண்டுகளில் இவற்றுடன் 60,000 புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2014-ல்  ஆறு  எய்ம்ஸ் மட்டுமே நாம் பெற்றிருந்தோம். இன்று நாடு வலுவான வலைப்பின்னலுடன் 22 எய்ம்ஸை நோக்கி முன்னேறுகிறது இந்தியாவின்  ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியையாவது உறுதி செய்ய பணிகள் நடைபெறுகின்றன.  19 மாநில புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகங்கள் மற்றும் 20 மூன்றாம் நிலை கவனிப்புக்கான புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகங்களுக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதன் மூலம் புற்றுநோய் கவனிப்பு அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு பெற்றுள்ளது. 30-க்கும் அதிகமான கல்விக் கழகங்களின் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கமும், ஆயுஷ்மான் பாரத், அடிப்படைக் கட்டமைப்பு இயக்கமும், நாட்டின் சுகாதாரத்துறைக்கு நவீன வடிவத்தை வழங்கும் என்று அவர் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்ற தமது வேண்டுகோளை வலியுறுத்தி பிரதமர் உரையை நிறைவு செய்தார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், சுகாதார வசதிகளை விரிவுபடுத்தி மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை அடிப்படையில், சிஎன்சிஐ இரண்டாவது வளாகம் கட்டப்பட்டுள்ளது. சிஎன்சிஐ அதிக எண்ணிக்கையிலான புற்று நோயாளிகளைக் கொண்டிருந்ததால் இதன் விரிவாக்கம் தேவை என்பது சில நேரங்களில் உணரப்பட்டது. இரண்டாவது வளாகம் மூலம் இந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

சிஎன்சிஐ 2-வது வளாகம் ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்டது. இதில், 75:25 என்ற விகிதத்தில் ரூ.400 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை மேற்கு வங்க அரசாலும் வழங்கப்பட்டது. புற்றுநோய் கண்டறிதல், நோய் பரவும் நிலை, சிகிச்சை, கவனிப்பு ஆகியவற்றுக்கான அனைத்து உள்கட்டமைப்புகளுடன் 460 படுக்கை வசதி கொண்ட விரிவான புற்றுநோய் மையமான இந்த வளாகம் அமைந்துள்ளது. அணு மருத்துவம் (பிஇடி), 3.0 டெஸ்லா எம்ஆர்ஐ, 128 ஸ்லைஸ் சிடி ஸ்கேனர், அணுக்கதிரியக்க சிகிச்சைப் பிரிவு போன்ற நவீன வசதிகளை இந்த வளாகம் கொண்டுள்ளது. புற்று நோய்க்கான நவீன ஆராய்ச்சி வசதிகளுடன் செயல்படவிருக்கும் இந்த வளாகம் புற்று நோயாளிகளுக்கு, குறிப்பாக  நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு  ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்கும்.

உரையை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India’s Space Sector: A Transformational Year Ahead in 2025

Media Coverage

India’s Space Sector: A Transformational Year Ahead in 2025
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 24, 2024
December 24, 2024

Citizens appreciate PM Modi’s Vision of Transforming India