பிரதமர் திரு நரேந்திர மோடி, முஸ்லீம் உலக லீக் தலைமைச் செயலாளர் மேன்மை தாங்கிய ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசாவுடன், சமயங்களுக்கு இடையேயான உரையாடல், தீவிரவாத சிந்தனைகளுக்கு எதிரான நடவடிக்கை, உலக அமைதியை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் இந்தியா, சவுதி அரேபியா இடையேயான ஆழமான நட்புறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேன்மை தாங்கிய ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா இச்சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் பதிலளித்து இருப்பதாவது;
முஸ்லீம் உலக லீக் தலைமைச் செயலாளரும், முஸ்லீம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான மேன்மை தாங்கிய ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா-வை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. சமயங்களுக்கு இடையேயான உரையாடல், தீவிரவாத சிந்தனைகளுக்கு எதிரான நடவடிக்கை, உலக அமைதியை முன்னெடுத்துச் செல்லுதல், இந்தியா, சவுதி அரேபியா இடையேயான ஆழமான நட்புறவு குறித்து நாங்கள் சிறப்பான முறையில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.
Pleased to have met H.E. Sheikh @MhmdAlissa, Secretary General of @MWLOrg and Chairman of the Organisation of Muslim Scholars. We had a great exchange of views on furthering inter-faith dialogue, countering extremist ideologies, promoting global peace, and deepening partnership… https://t.co/yenOiez6Vt
— Narendra Modi (@narendramodi) July 12, 2023