புதுதில்லியில் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலிய குடியரசின் பிரதமர் திருமிகு ஜியோர்ஜியா மெலோனியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார். மார்ச் 2023 இல் தனது அரசுப் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மெலோனியின் இரண்டாவது இந்தியா வருகை இதுவாகும்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்துக்கும் ஆதரவு அளித்தமைக்கும், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மற்றும் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் இத்தாலி இணைவதற்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை இரு தலைவர்களும் திருப்தியுடன் குறிப்பிட்டனர். இந்தியா-இத்தாலி வியூகக் கூட்டாண்மையின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு மற்றும் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். ஜி7 மற்றும் ஜி20 ஆகியவை உலகளாவிய நன்மைக்காக எதிரொலிக்கும் வகையில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் குறிப்பிட்டனர்.
ஜி20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக பிரதமருக்கு, பிரதமர் மெலோனி வாழ்த்து தெரிவித்தார்.
Ho avuto un’eccellente discussione con il PM @GiorgiaMeloni. La nostra conversazione ha coperto vari settori tra cui commercio, difesa, tecnologie emergenti e molto altro. L’India e l’Italia continueranno a lavorare insieme per la prosperità globale. pic.twitter.com/j9X6vWW7LG
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
I had excellent meeting with PM @GiorgiaMeloni. Our talks covered sectors such as trade, commerce, defence, emerging technologies and more. India and Italy will keep working together for global prosperity. pic.twitter.com/mBtyczMjB0
— Narendra Modi (@narendramodi) September 9, 2023