பிரதமர் திரு. நரேந்திர மோடி 10 செப்டம்பர் 2023 அன்று தில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது காமோரோஸ் அதிபர்  திரு. அசாலி அசோமானியை சந்தித்தார்.

ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராக மாற்றுவதற்கான பிரதமரின் முன்முயற்சிகளுக்கு அதிபர்  அசோமானி நன்றி தெரிவித்தார். ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் பங்கு மற்றும் தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவியின் போது இது நிகழ்ந்தது என்று அவர் தனது  மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இது இந்தியா - காமோரோஸ் உறவுகளுக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கருதினார். இந்தியாவின் ஜி-20 மாநாட்டின் வெற்றிக்காக பிரதமருக்கு அவர் மேலும் வாழ்த்து தெரிவித்தார்.

ஜி 20 அமைப்பில் இணைந்ததற்காக ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் காமோரோசுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், உலகளாவிய தெற்கின் குரலை வெளிப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்தார், மேலும் ஜனவரி 2023 இல் இந்தியா கூட்டிய உலகளாவிய தெற்குக்கான குரல் உச்சிமாநாட்டை அவர் நினைவு கூர்ந்தார்.

இருதரப்பு நட்புறவு குறித்து விவாதிக்கவும் இரு தலைவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடந்து வரும் பல்வேறு முயற்சிகள் குறித்து திருப்தி தெரிவித்த அவர்கள், கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் வளர்ச்சி கூட்டாண்மை போன்ற துறைகளில் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.

 

Explore More
78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

78-வது சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
India's Q3 GDP grows at 6.2%, FY25 forecast revised to 6.5%: Govt

Media Coverage

India's Q3 GDP grows at 6.2%, FY25 forecast revised to 6.5%: Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 1, 2025
March 01, 2025

PM Modi's Efforts Accelerating India’s Growth and Recognition Globally