கதர்ப் பொருட்கள் விற்பனையில் நிகழ்த்தப்பட்டுள்ள புதிய சாதனையை ஊக்கமளிக்கும் சாதனை என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார். நாட்டு மக்களிடையே உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் மீதான ஆர்வம் வேகமாக வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதி இந்தியாவின் ஒரு பதிவுக்கு அவர் எக்ஸ் தளத்தில் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
"மிகவும் ஊக்கமளிக்கும் சாதனை! சுதேசி நோக்கிய போக்கு நாட்டு மக்களிடையே எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை கதர் விற்பனையின் இந்தப் புதிய சாதனை காட்டுகிறது. கதரோடு தொடர்புடைய நமது கைவினைஞர் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதில் இந்த உணர்வு பேருதவியாக இருக்கிறது என்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்’’..
बहुत उत्साहवर्धक उपलब्धि! खादी की ब्रिकी का यह नया रिकॉर्ड बताता है कि देशवासियों के बीच स्वदेशी को लेकर रुझान किस तेजी से बढ़ रहा है। मुझे खुशी है कि यह भावना खादी से जुड़े हमारे कारीगर भाई-बहनों के जीवन को भी आसान बनाने में बहुत मददगार बनी है। https://t.co/blmN8RRGZq
— Narendra Modi (@narendramodi) October 5, 2024