இசஞ்சீவனி செயலியில் 10 கோடி தொலை மருத்துவ ஆலோசனைகள் என்னும் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்விட்டரை பகிர்ந்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
“10,00,00,000 தொலை மருத்துவ ஆலோசனைகள் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். இந்தியாவில் வலுவான டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் அனைத்து மருத்துவர்களையும் நான் பாராட்டுகிறேன்.”
10,00,00,000 tele-consultations is a remarkable feat. I laud all those doctors who are at the forefront of building a strong digital health eco-system in India. https://t.co/jQaXERtLI9
— Narendra Modi (@narendramodi) February 17, 2023