சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 4-வது இடத்தைப் பிடித்தது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் வெளியிட்டுள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 4 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றது.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது;
"சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தனது சிறந்த செயல்திறனுடன் 4 வது இடத்திற்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. நமது அணி 4 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்தச் சாதனை பல இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதுடன், கணிதத்தை இன்னும் பிரபலமாக்க உதவும்"
It’s a matter of immense joy and pride that India has come 4th in its best-ever performance in the International Maths Olympiad. Our contingent has brought home 4 Golds and one Silver Medal. This feat will inspire several other youngsters and help make mathematics even more…
— Narendra Modi (@narendramodi) July 21, 2024