பிரதமர் திரு. நரேந்திர மோடி, பறிமுதல் செய்த 1,44,000 கிலோ போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்பட்டதன் மூலம், போதைப்பொருட்களை ஒழிப்பதில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல்லை எட்டியதை பாராட்டினார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தனது ட்விட்டரில், இந்த சாதனையின் மூலம், ஒரே ஆண்டில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 1 மில்லியன் கிலோ போதைப்பொருட்களை அழித்து இந்தியா வியக்கத்தக்க சாதனையை எட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிராந்திய மாநாடு நடக்கும் போது இந்த குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையில் உள்துறை அமைச்சகத்தின் உறுதியான மற்றும் இடைவிடாத பின்தொடருதலை எடுத்துக்காட்டுகிறது.
இதற்கு பதிலளித்து பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.
"நல்லது! போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான நமது முயற்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
Great! Adds strength to our efforts to make India free from the drugs menace. https://t.co/JT77u8aOqT
— Narendra Modi (@narendramodi) July 17, 2023