வாரணாசியில் ரூ. 644 கோடி செலவில் 3.85 கிலோ மீட்டர் நீள பொதுப் போக்குவரத்து கம்பிவட வழித்தடம் அமைக்கப்படுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் ரூ. 644 கோடி செலவில் 3.85 கிலோ மீட்டர் நீள பொதுப் போக்குவரத்து கம்பிவட வழித்தடம் அமைக்கப்படுவது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவை மறு பதிவு செய்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
“நம்பிக்கை மற்றும் தொழில்நுட்பத்தின் அற்புதமான சங்கமம்! வாரணாசியில் அமைக்கப்படும் இந்த கம்பிவட வழித்தடம் பக்தர்களின் பயண அனுபவத்தை சுவாரஸ்யமானதாகவும், மறக்க முடியாததாகவும் மாற்றுவதோடு மட்டுமல்லாமல், பாபா விஸ்வநாதரை எளிதில் தரிசனம் செய்ய அவர்களுக்கு வசதியை ஏற்படுத்தும்.”
आस्था और टेक्नोलॉजी का अद्भुत संगम! वाराणसी में तैयार हो रहे इस रोप-वे से श्रद्धालुओं के लिए यात्रा का अनुभव बहुत रोचक और यादगार तो होगा ही, इससे बाबा विश्वनाथ के दर्शन में भी उन्हें बहुत सुविधा होगी। https://t.co/AMbBQsdEdr
— Narendra Modi (@narendramodi) March 29, 2023