உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு வன உயிரின ஆர்வலர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த நாள் நமது பூமியின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது என்றும் அதைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
"உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகள். நமது பூமியின் வியக்கத்தக்க பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், அதைப் பாதுகாப்பதற்குமான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கும் இது ஒரு நாளாகும். நிலையான சூழல் பாதுகாப்பு நடைமுறைகளில் முன்னணியில் இருப்பவர்களையும், வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிப்பவர்களையும் நான் பாராட்டுகிறேன்.”
Greetings to all wildlife enthusiasts on #WorldWildlifeDay. This is a day to celebrate the incredible diversity of life on our planet and to reiterate our commitment towards protecting it. I also appreciate all those who are at the forefront of sustainable practices, and…
— Narendra Modi (@narendramodi) March 3, 2024