ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். இயற்கை வளங்கள் நிரம்பிய இந்த மாநிலம், வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். பழங்குடி சமூகத்தின் போராட்டம் மற்றும் தியாகங்களால் எழுச்சி பெற்ற இந்த நிலம், நாட்டை எப்போதும் பெருமைப்படுத்தியுள்ளது. இயற்கை வளங்கள் நிறைந்த இந்த மாநிலம், வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."
झारखंड के अपने सभी भाई-बहनों को राज्य के स्थापना दिवस पर अनेकानेक शुभकामनाएं। जनजातीय समाज के संघर्ष और बलिदान से सिंचित इस धरती ने देश को हमेशा गौरवान्वित किया है। मेरी कामना है कि प्राकृतिक संसाधनों से परिपूर्ण यह प्रदेश प्रगति के पथ पर तेज रफ्तार से आगे बढ़े।
— Narendra Modi (@narendramodi) November 15, 2024