ஆயுர்வேத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பகவான் தன்வந்தரியின் பிறந்த தினத்தின் புனித தருணம் இது என்றும் நமது மகத்தான கலாச்சாரத்தில் ஆயுர்வேதத்தின் பயன்பாடு மற்றும் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதம் தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
"நாட்டுமக்கள் அனைவருக்கும் ஆயுர்வேத தின நல்வாழ்த்துகள். பகவான் தன்வந்தரியின் பிறந்த தினமான இந்த புனிதமான தருணம், நமது மகத்தான கலாச்சாரத்தில் ஆயுர்வேதத்தின் பயன்பாடு மற்றும் பங்களிப்போடு தொடர்புடையது. அதன் முக்கியத்துவம் தற்போது உலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பழங்கால மருத்துவ முறை ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்."
समस्त देशवासियों को आयुर्वेद दिवस की बहुत-बहुत शुभकामनाएं। भगवान धन्वंतरि की जन्म-जयंती का यह पावन अवसर हमारी महान संस्कृति में आयुर्वेद की उपयोगिता और उसके योगदान से जुड़ा है, जिसके महत्त्व को आज पूरी दुनिया मान रही है। मुझे विश्वास है कि चिकित्सा की यह प्राचीन पद्धति पूरी…
— Narendra Modi (@narendramodi) October 29, 2024