ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் குறிக்கும் தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தன்வந்திரி பகவானின் ஆசீர்வாதத்தை நாடிய திரு மோடி, அனைத்துக் குடிமக்களும் ஆரோக்கியமாகவும், வளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றும், வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாடு தொடர்ந்து புதிய ஆற்றலைப் பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் குறிக்கும் தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள். தன்வந்திரி பகவானின் அருளால், நீங்கள் அனைவரும் எப்போதும் ஆரோக்கியமாகவும், வளமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கவும், வளர்ந்த இந்தியாவின் உறுதி தொடர்ந்து புதிய ஆற்றலைப் பெறவும் விழைகிறேன்”.
देश के मेरे सभी परिवारजनों को आरोग्य एवं सुख-समृद्धि के प्रतीक पर्व धनतेरस की बहुत-बहुत बधाई। मेरी कामना है कि भगवान धन्वंतरि की कृपा से आप सभी सदैव स्वस्थ, संपन्न और प्रसन्न रहें, जिससे विकसित भारत के संकल्प को नई ऊर्जा मिलती रहे।
— Narendra Modi (@narendramodi) November 10, 2023