விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்டுமானம் மற்றும் உருவாக்கத்துடன் தொடர்புடைய திறமை மிகுந்த, கடினமாக உழைக்கும் கைவினைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கும் அவர் மரியாதை செலுத்தினார். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அவர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றதாக இருக்கும் என்று தாம் நம்புவதாக திரு மோடி \தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பகவான் விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தத் தருணத்தில், கட்டுமானம் மற்றும் படைப்புத் துறையுடன் தொடர்புடைய எனது திறமையான, கடின உழைப்பாளி சகாக்கள் அனைவருக்கும் நான் சிறப்பு மரியாதை செலுத்துகிறேன். வளர்ந்த மற்றும் சுயசார்பு இந்தியாவின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் உங்கள் பங்களிப்பு இணையற்றதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ”
सभी देशवासियों को भगवान विश्वकर्मा जयंती की अनेकानेक शुभकामनाएं। इस अवसर पर निर्माण और सृजन से जुड़े अपने सभी हुनरमंद एवं परिश्रमी साथियों को मेरा विशेष नमन। मुझे विश्वास है कि विकसित और आत्मनिर्भर भारत के संकल्प की सिद्धि में आपका अप्रतिम योगदान रहने वाला है। pic.twitter.com/GCAASb2zpy
— Narendra Modi (@narendramodi) September 17, 2024