உத்தரப்பிரதேச மாநில அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆன்மீகம், அறிவு, கல்வி என அனைத்தையும் கொண்ட பூமியான உத்தரபிரதேசத்தின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் மாநிலத்தின் அமைப்பு நாளில் நல்வாழ்த்துகள். கடந்த ஏழு ஆண்டுகளில், இம்மாநிலம் வளர்ச்சி தொடர்பான புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இதில் மாநில அரசும் மக்களும் பெரிய அளவில் பங்கெடுத்துள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியாவின் லட்சியப் பயணத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் முக்கியப் பங்காற்றும் என்று நம்புகிறேன்."
अध्यात्म, ज्ञान और शिक्षा की तपोभूमि उत्तर प्रदेश के अपने सभी परिवारजनों को राज्य के स्थापना दिवस की अनेकानेक शुभकामनाएं। बीते सात वर्षों में प्रदेश ने प्रगति की एक नई गाथा लिखी है, जिसमें राज्य सरकार के साथ जनता-जनार्दन ने भी बढ़-चढ़कर भागीदारी की है। मुझे विश्वास है कि विकसित…
— Narendra Modi (@narendramodi) January 24, 2024