மத்தியப் பிரதேசம் உருவான நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"ஒவ்வொரு நாளும் வளர்ச்சியின் புதிய உயரங்களை அடைந்து வரும் மத்தியப் பிரதேசம், அமிர்த காலத்தில் நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறது. இந்த மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்."
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மத்தியப் பிரதேசம் உருவான தினத்தை முன்னிட்டு எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியின் புதிய உயரங்களைத் தொட்டு வரும் மத்தியப் பிரதேசம், அமிர்த காலத்தில் நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறது. இந்த மாநிலம் முன்னேற்றப் பாதையைத் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். "
मध्य प्रदेश के अपने सभी परिवारजनों को राज्य के स्थापना दिवस पर मेरी हार्दिक शुभकामनाएं। विकास की नित-नई ऊंचाइयों को छू रहा हमारा मध्य प्रदेश अमृतकाल में देश के संकल्पों को साकार करने में अहम योगदान दे रहा है। मेरी कामना है कि यह राज्य प्रगति के पथ पर यूं ही निरंतर अग्रसर रहे।
— Narendra Modi (@narendramodi) November 1, 2023