சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரை ஒரு சிறப்பு மாநிலமாக அதன் மக்களின் உயிர்ப்பு மாற்றியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். மாநிலத்தின் கலாச்சாரத்தை வளப்படுத்துவதில் பழங்குடி சமூகங்களின் பங்கு மிக முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார். மாநிலத்தின் பெருமைமிக்க பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் அனைவரையும் ஈர்க்கிறது எனவும் இயற்கை மற்றும் கலாச்சார சிறப்புகள் நிறைந்த சத்தீஸ்கருக்கு ஒளிமயமான எதிர்காலம் ஏற்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சத்தீஸ்கர் மாநிலத்தின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மாநில தினத்தை முன்னிட்டு வாழ்த்துகள். இங்குள்ள மக்களின் உயிர்ப்பு இதை ஒரு சிறப்பு மாநிலமாக ஆக்குகிறது. இந்த மாநிலத்தின் கலாச்சாரத்தை வளப்படுத்துவதில் நமது பழங்குடி சமூகங்களின் பங்கு மிக முக்கியமானது. மாநிலத்தின் பெருமைமிக்க பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் அனைவரையும் ஈர்க்கிறது. இயற்கை மற்றும் கலாச்சார செழிப்பு நிறைந்த சத்தீஸ்கருக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். "
छत्तीसगढ़ के अपने सभी भाइयों और बहनों को राज्य के स्थापना दिवस की ढेरों शुभकामनाएं। यहां के लोगों की जीवंतता इसे एक विशेष राज्य बनाती है। इस राज्य की संस्कृति को समृद्ध बनाने में हमारे आदिवासी समुदायों का बहुत ही अहम योगदान है। प्रदेश की गौरवशाली परंपरा और सांस्कृतिक विरासत हर…
— Narendra Modi (@narendramodi) November 1, 2023