தேசிய மாணவர் படை தினத்தையொட்டி, தேசிய மாணவர் படையினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். என்சிசி முன்னாள் மாணவர் சங்கத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று என்சிசி முன்னாள் மாணவர் படையினரை திரு மோடி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;
என்சிசி தினத்தையொட்டி வாழ்த்துக்கள். ‘’ ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்’’ என்னும் குறிக்கோளால் ஈர்க்கப்பட்டுள்ள இந்திய இளைஞர்களுக்கு, அவர்களின் உண்மையான ஆற்றலை உணர்ந்து கொள்ளும் வகையில் பெரும் அனுபவத்தை என்சிசி வழங்குவதுடன், நாட்டைக் கட்டமைப்பதில், பங்கேற்கவும் செய்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த என்சிசி பேரணியில் எனது உரை.
சில தினங்களுக்கு முன்பு, ஜான்சியில் ‘’ ராஷ்ட்ர ரக்சா சம்பர்பன் பர்வ்’’-ன் போது, என்சிசி முன்னாள் மாணவர் சங்கத்தின் முதல் உறுப்பினராக என்னைப் பதிவு செய்துகொள்ளும் பெருமையைப் பெற்றேன். என்சிசி-யுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவரையும் ஒன்றாக கொண்டு வரும் முன்னாள் மாணவர் சங்கத்தை உருவாக்குவது பாராட்டுக்குரிய முயற்சியாகும்.
A few days back, during the 'Rashtra Raksha Samparpan Parv’ in Jhansi, I was honoured to register as the first member of the NCC Alumni Association. The formation of an Alumni Association is a commendable effort to bring together all those who have been associated with NCC. pic.twitter.com/MFuCf5YD0g
— Narendra Modi (@narendramodi) November 28, 2021
இந்தியா முழுவதும் உள்ள என்சிசி முன்னாள் மாணவர்கள், என்சிசி முன்னாள் மாணவர் சங்கத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்று ஆதரவளிப்பதன் மூலம் அதனைச் செழுமைப்படுத்த வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். என்சிசி அனுபவங்களை மேலும் துடிப்புடனும், அர்த்தமுள்ளதாகவும் ஆக்க இந்திய அரசும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.