பட்டய கணக்காளர்கள் தினத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி பட்டய கணக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், "பட்டய கணக்காளர்கள் தினத்தில் அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும் வாழ்த்துகள். இந்தியாவின் முன்னேற்றத்தில், பட்டய கணக்காளர் சமூகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கள் பணியை மிகச்சிறப்பாக செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உலகளவில் இந்திய நிறுவனங்களை உன்னதமானவையாக உருவாக்க வேண்டும் என்றும் நான் பட்டய கணக்காளர்களைக் கேட்டுக்கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.
Greetings to all Chartered Accountants on CA Day. This community has a vital role in India’s progress. I call upon all CAs to keep the focus on excellence so that Indian firms emerge as one of the best globally.
— Narendra Modi (@narendramodi) July 1, 2021