பாகல்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான நிலைமை குறித்து முதலமைச்சர் திரு நிதிஷ் குமாரிடம் பிரதமர் பேசிய போது, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது என்றும், பலியானவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த குண்டுவெடிப்பால் உயிர் இழப்பு செய்தி வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த சம்பவம் தொடர்பான நிலைமை குறித்து முதல்வர் @நிதிஷ்குமார் அவர்களிடம் பேசினேன். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
बिहार के भागलपुर में धमाके से हुई जनहानि की खबर पीड़ा देने वाली है। मैं घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। घटना से जु़ड़े हालातों पर मुख्यमंत्री @NitishKumar जी से भी बात हुई। प्रशासन राहत और बचाव कार्यों में लगा हुआ है, और पीड़ितों को हर संभव सहायता दी जा रही है।
— Narendra Modi (@narendramodi) March 4, 2022