அகமதாபாத் – மஹசனா (64.27கி.மீ) இடையே அகலப்பாதை மாற்றுத் திட்டம் நிறைவடைந்ததற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது வணிகத்திற்கும், போக்குவரத்திற்கும் சிறந்த பயனளிக்கும் என்று திரு.மோடி கூறியுள்ளார்.
அகமதாபாத் – மஹசனா இடையேயான பயணத் தூரத்தைக் குறைத்து, அகமதாபாத் – தில்லி வழித்தடத்தில் சரக்குப் போக்குவரத்துத் திறனை அதிகரிக்கும்.
ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
“வணிகத்திற்கும், போக்குவரத்திற்கும் சிறந்த பயனளிக்கும்”.
Great for commerce and connectivity. https://t.co/qxV2jwKz9r
— Narendra Modi (@narendramodi) March 6, 2023