ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 7 வேளாண் உபகரண வாடகை மையங்கள், சுய உதவிக் குழுக்களுக்கு 9 பசுமைக் குடில்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஜம்மு காஷ்மீரின், குறிப்பாக முன்னேற விரும்பும் மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கிய நமது உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக, ஏராளமான வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.”
The remarkable range of developmental works inaugurated stand as a testament to our commitment towards enhancing the quality of life for the people of Jammu and Kashmir, especially the aspirational districts. https://t.co/4nFo6RWuul
— Narendra Modi (@narendramodi) June 1, 2023