தேவ் தீபாவளி அன்று லட்சக்கணக்கான அகல் விளக்குகளால் காசி நகரம் ஜொலிப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்த பதிவில் கூறியிருப்பதாவது:
“பாபா விஸ்வநாதரின் நகரமான காசியின் பிரம்மாண்டமான தோற்றம், தேவ தீபாவளியன்று லட்சக்கணக்கான விளக்குகளால் ஜொலித்தது, மனதை மயக்குகிறது. விளக்கு தானம் செய்யும் இந்த பாரம்பரியத்தை உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் காண்கிறார்கள். அன்னை கங்கைக் கரையில் எங்கும் பரவியிருக்கும் தெய்வீக ஒளி, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் ஒளிர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
देव दीपावली पर लाखों दीयों से जगमग बाबा विश्वनाथ की नगरी काशी का भव्य स्वरूप मन को मोह लेता है। दीपदान की इस परंपरा का दुनिया भर के लोग साक्षी बनते हैं। मेरी कामना है कि मां गंगा के तट पर चारों ओर फैली दिव्य ज्योति हर किसी के जीवन को सुख, शांति, समृद्धि और उत्तम स्वास्थ्य से रोशन… pic.twitter.com/6G9dCDKMS6
— Narendra Modi (@narendramodi) November 15, 2024