வயது வந்தவர்களில் 75%_க்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பது பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் டுவிட்டரையடுத்து பிரதமர் கூறியிருப்பதாவது;
‘’ வயது வந்த 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த முக்கியமான சாதனைக்காக நமது குடிமக்களுக்கு வாழ்த்துக்கள்.
நமது தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக மாற்றிய அனைவர் குறித்தும் பெருமிதம் கொள்கிறேன். ‘’
75% of all adults are fully vaccinated.
— Narendra Modi (@narendramodi) January 30, 2022
Congratulations to our fellow citizens for this momentous feat.
Proud of all those who are making our vaccination drive a success. https://t.co/OeCJddtAL8