ஆஷா எனப்படும் அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்களுக்கு உலக சுகாதார அமைப்பின், டைரக்டர் ஜெனரலின் குளோபல் ஹெல்த் லீடர்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் மோடி, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் ஆஷா பணியாளர்கள் முன்னணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆஷா பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், உறுதிப்பாடும் போற்றத்தக்கது எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் டுவிட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் செய்தியில், “ஆஷா பணியாளர்களின் ஒட்டுமொத்த குழுவுக்கும், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் குளோபல் ஹெல்த் லீடர்ஸ் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஆஷா பணியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் அவர்கள் முன்னணியில் உள்ளனர். அவர்களி்ன் அர்ப்பணிப்பும், உறுதிப்பாடும் போற்றத்தக்கது”.
Delighted that the entire team of ASHA workers have been conferred the @WHO Director-General’s Global Health Leaders’ Award. Congratulations to all ASHA workers. They are at the forefront of ensuring a healthy India. Their dedication and determination is admirable. https://t.co/o8VO283JQL
— Narendra Modi (@narendramodi) May 23, 2022