ஜெம் (அரசு இ-சந்தை)-யின் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மொத்த வணிக மதிப்பீடு ரூ.2 லட்சம் கோடியை தாண்டியிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் வெளியிட்டுள்ள பதில் பதிவில் கூறியிருப்பதாவது:
”அற்புதம்! இந்திய மக்களுக்காக தன்னுடைய ஆற்றலை ஜெம் இந்தியா நிரூபித்திருக்கிறது. இதன் மூலம் ஏராளமான குடிமக்களின் செழுமையும் சிறந்த சந்தை வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது”
Excellent! @GeM_India has given us a glimpse of the energy and enterprise of the people of India. It has ensured prosperity and better markets for many citizens. https://t.co/EhDdZofBqk
— Narendra Modi (@narendramodi) March 31, 2023