கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டோக்கியோவில் நடைபெற்ற தாண்டியா மஸ்தி நிகழ்ச்சியின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஒருவரை சிபிஆர் மற்றும் ஏஇடி சிகிச்சை மூலம் காப்பாற்றியதற்காக ஜப்பானில் வசிக்கும் இந்தியர் திருமதி தீபாலி ஜவேரிக்கு, ஜப்பானில் உள்ள ஜோடோ தீயணைப்பு நிலையத்தில் திரு ஓடா விருது வழங்கியமைக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;
“இதை அறிவது மகிழ்ச்சி அடைகிறேன், பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் உரிய நேரத்தில் உதவி புரிவது முக்கியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.”
本件を喜ばしく思います。そしてこれは、影響を受けた人々が必要としている時に支援を行うことの重要性を強調しています。 https://t.co/KjtOvEpoyh
— Narendra Modi (@narendramodi) April 6, 2023
This is gladdening to know, and it underscores the importance of giving timely assistance to any person affected. https://t.co/KjtOvEpoyh
— Narendra Modi (@narendramodi) April 6, 2023