இமாச்சலப்பிரதேச மாநிலம் குலுவில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார். மாநில அரசும், உள்ளூர் நிர்வாகமும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்;
“இமாச்சலப்பிரதேசத்தின் குலுவில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மலானா கிராமத்தில் ஏற்பட்ட இந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசும், உள்ளூர் நிர்வாகமும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
हिमाचल प्रदेश के कुल्लू में हुआ अग्निकांड अत्यंत दुखद है। ऐतिहासिक मलाणा गांव में हुई इस त्रासदी के सभी पीड़ित परिवारों के प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। राज्य सरकार और स्थानीय प्रशासन राहत और बचाव के काम में पूरी तत्परता से जुटे हैं।
— Narendra Modi (@narendramodi) October 27, 2021