இந்திய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், அவர்களை உயர்த்தவும் அர்ப்பணிக்கப்பட்ட மிகச் சிறந்த முன்முயற்சியான பிரதமரின் விவசாயிகள் நலனுக்கான நிதித் திட்டத்தின் 6-வது ஆண்டில் நாடு முழுவதும் உள்ள வேளாண் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர்களின் கணக்குகளில் இதுவரை ரூ.3.5 லட்சம் சேர்ந்திருப்பது குறித்து அவர் திருப்தி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது;
“பிஎம் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் 6-வது ஆண்டு நிறைவில் நாடு முழுவதும் உள்ள நமது வேளாண் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். அவர்களின் கணக்குகளில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் சேர்ந்திருப்பது எனக்கு அபரிமிதமான திருப்தியையும், பெருமையையும் அளிப்பதாக உள்ளது. எங்களின் இந்த முயற்சி விவசாயிகளுக்கு மதிப்பு, வளம், புதிய பலம் ஆகியவற்றை அளிப்பதாக உள்ளது.
#PMKisan”
पीएम-किसान के 6 वर्ष पूरे होने पर देशभर के हमारे किसान भाई-बहनों को बहुत-बहुत बधाई। मेरे लिए अत्यंत संतोष और गर्व का विषय है कि अब तक करीब साढ़े तीन लाख करोड़ रुपये उनके खाते में पहुंच चुके हैं। हमारा ये प्रयास अन्नदाताओं को सम्मान, समृद्धि और नई ताकत दे रहा है। #PMKisan
— Narendra Modi (@narendramodi) February 24, 2025