புனித அமர்நாத் யாத்திரை தொடங்கி இருப்பதை முன்னிட்டு அனைத்து யாத்ரீகர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"புனித அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு அனைத்து யாத்ரீகர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். பாபா பர்ஃபானியின் தரிசனம் மற்றும் ஆசீர்வாதத்துக்கான இந்தப் பயணம் சிவ பக்தர்களுக்கு எல்லையற்ற ஆற்றலைத் தரவிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் பாபா பர்ஃபானியின் அருளால் நன்மை அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன்."
पवित्र अमरनाथ यात्रा के शुभारंभ पर सभी तीर्थयात्रियों को मेरी हार्दिक शुभकामनाएं। बाबा बर्फानी के दर्शन और वंदन से जुड़ी यह यात्रा शिवभक्तों में असीम ऊर्जा का संचार करने वाली होती है। उनकी कृपा से सभी श्रद्धालुओं का कल्याण हो, यही कामना है। जय बाबा बर्फानी!
— Narendra Modi (@narendramodi) June 29, 2024