கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"கடற்படை தினத்தை முன்னிட்டு, இந்திய கடற்படையின் அனைத்து பணியாளர்களுக்கும் வாழ்த்துகள். நமது கடல் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் உறுதிப்பாடு, கடமையில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் நம் தேசத்தின் மீதான அன்புக்கு ஒரு சான்றாகும். ஒவ்வொரு சூழ்நிலையிலும், அவர்களின் உணர்வும், உறுதியும் அசைக்க முடியாததாக இருக்கும். அவர்களின் சேவை மற்றும் தியாகங்களுக்கு நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
மகாராஷ்டிராவின் சிந்துதுர்க்கில் இன்று நடைபெறும் கடற்படை தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளேன். இந்த இடம், சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. ஒரு வலுவான கடற்படையை உருவாக்குவதற்கான அவரது முயற்சிகள் நன்கு அறியப்பட்டவை.”
On Navy Day, best wishes to all the personnel of the Indian Navy. Their commitment to safeguarding our seas is a testament to their unwavering dedication to duty and love for our nation. In every circumstance, their spirit and resolve remain unshakable. We are forever grateful…
— Narendra Modi (@narendramodi) December 4, 2023